Tuesday, July 22, 2014

காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

தேவையானவை :

ஒரு கப் அரிசி
முக்கால் கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் அரை ஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
உப்பு
ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

செய்முறை :

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
பிறகு தோசைகல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வர்க்கனும்.
நல்ல கரகரப்பாக சூப்பராக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

No comments:

Blog Archive