Tuesday, July 22, 2014

சமோசா

தேவையானவை :

4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு 
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும் 
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா 
உப்பு தேவையான அளவு 
கொஞ்சம் மஞ்சள் பொடி

மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு 
ஒரு சிட்டிகை சோடா உப்பு 
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:

முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும். 
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும். 
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் . 
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி. 
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும். 
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.

No comments:

Blog Archive