Tuesday, July 22, 2014

காஞ்சிபுரம் இட்லி

இதற்கு ஏன் இந்த பெயர் என்றால், காஞ்சிபுரம் கோவிலில் இதை 'குடலை இட்லி' என்று சொல்வார்கள். இதை மந்தாரை இலை இல் தான் செய்வார்கள், அந்த அளவு மாவு கெட்டியாக இருக்கும். இருக்கணும். எங்க அம்மா பாட்டி எல்லாம் இதை இட்லி தட்டில் செய்ய மாட்டா , சின்ன சின்ன கப் களில் அல்லது டம்ளர் இல் விட்டு வேக வைப்பார்கள். இப்ப நான் இட்லி தட்டிலேயே வார்த்து விடுவேன்.

தேவையானவை :

ஒரு கப் அரிசி 
முக்கால் கப் உளுத்தம் பருப்பு 
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் அரை ஸ்பூன் 
சுக்கு பொடி அரை ஸ்பூன் 
உப்பு 
ஒரு பெரிய கரண்டி எண்ணெய் 

செய்முறை :

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்கணும். 
சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார் புன்னகை 
இதற்கு தொட்டுக்கொள்ளவே எதுவும் வேண்டி இருக்காது. வேண்டுமானால் தோசை மிளகாய் பொடி போட்டுக்கலாம். இல்லாவிட்டால் கட்டி தயிர் நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive