Tuesday, October 6, 2020

புடலங்காய் துவையல்

Ingredients:
  • 1/4 கிலோ புடலங்காய்
  • 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  • 2 டீ ஸ்பூன் எள்


Method:
  • புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
  • புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.


Notes:
  • எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive