- தேங்காய் 1 துருவிக்கொள்ளவும்
- குண்டு மிளகாய் வற்றல் 5 - 6
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- தாளிக்க எண்ணெய் + கடுகு, உளுத்தம் பருப்பு
- உப்பு
Method:
- ஒரு வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பேசினில் கொட்டிக்கொள்ளவும்.
- அதிலிருந்து மிளகாய் வற்றல் ஐ மட்டும் எடுத்துகொண்டு, அத்துடன் தேங்காய் , உப்பு ,புளி பேஸ்ட் போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
- தேவை என்றால் மட்டுமே துளி ஜலம் விடுங்கோ....இல்லாவிட்டால் அப்படியே அரைக்கவும்.
- இதை தாளித்து வைத்ததுடன் கொட்டி கிளறவும்.
- அவ்வளவுதான், சுவையான 'தேங்காய் துவையல்' ரெடி.
- சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
- தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.
- ரசம் செய்யும் போது இதையும் செய்தால் அட்டகாசம் போங்கள்
No comments:
Post a Comment