சோளப் பணியாரம்
தேவையானவை:
சோளம் – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.
தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது
உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. ‘என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.

1 comment:
பயனுள்ள பதிவு கிருஷ்ணாம்மா!
Post a Comment