Monday, June 22, 2015

கொத்துக்கடலை சுண்டல்

தேவையானவை:

கொத்துக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்காயபொடி 1 /2 ஸ்பூன் 
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிவப்பு மிளகாய் 2 - 4 
உப்பு
தாளிக்க எண்ணை 
சோடா உப்பு 1 சிட்டிகை (தேவையானால் )

செய்முறை:

முதல் நாள் இரவே கொத்துக்டலையை சுத்தம் செய்து ஊரவைக்கவும்
காலை இல் குக்கர் இல் சோடா உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும் 
ஆறினதும், வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெந்த கொத்துக்கடலையை , நீரை வடித்துவிட்டு போடவும்.
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் , உப்பு மற்றும் பெருங்காயப்பொடி போட்டு மறுபடி கிளறி இறக்கவும்.
இப்ப கொத்துக்கடலை சுண்டல் தயார் புன்னகை

குறிப்பு: கொத்துக்கடல லிருந்து வடித்த தண்ணீரை, குழம்புக்கு ஊற்றலாம்.

No comments:

Blog Archive