பார்லி கஞ்சி
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத்
தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக
காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக்
குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை
சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில்
வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும்.
இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
தேவையானவை :
ஒரு கப் பார்லி
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை :
பார்லியை நன்கு அலசவும்.
பிறகு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
அது நன்கு வெந்து தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்கட்டும்.
பிறகு அதை வடிகட்டி துளி உப்பு போட்டு குடிக்கவும்.

No comments:
Post a Comment