Monday, June 22, 2015

ஆலு - சன்னா

ஆலு - சன்னா


தேவையானவை :

ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
இரண்டு பெரிய வெங்காயம்
4 - 5 பச்சை மிளகாய்
ஒரு இன்ச் இஞ்சி துண்டு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் கடுகு
கொத்துமல்லி இலைகள் கொஞ்சம்
கறிவேப்பிலை இலைகள்
கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்

பொடிக்க வேண்டியவை:

கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.

செய்முறை :

வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நறுக்கின வெங்காயத்தை போடவும்.
வதக்கவும்.
வேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.
மேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
கொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.
நன்கு கிளறவும்.
சேர்ந்தாற்போல ஆனதும் இறக்கவும்.
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive