கிருஷ்ணஜெயந்திக்கு செய்யவேண்டியவை
கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .
சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் ) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.
No comments:
Post a Comment