இப்ப பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்போம்
தேவையானவை:
தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 1/2 கப் (தேவையானால் 3/4 கூட போடலாம் )
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
சொப்பு செய்து அதன் உள் இதை வைத்து கொழுக்கட்டை செய்யவும்.
ஆவி இல் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான 'பூரண கொழுக்கட்டைகள்' நைவேத்தியத்துக்கு தயார்
குறிப்பு: தேவையானால், பூரணத்தில் முந்திரி துண்டுகள் சேர்க்கலாம்
No comments:
Post a Comment