இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு,பயத்தம் பருப்பு ,பச்சை பயறு , வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.
தேவையானவை:
மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
மிளகாய் வற்றல் 2 -3
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணை
உப்பு
செய்முறை:
இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை கோட்டவும்.
நன்கு கிளறவும்.
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி
குறிப்பு: இதற்க்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி இலேயே செயலாம். தலித்ததும், கலைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான்
No comments:
Post a Comment