Monday, December 12, 2011

பாலக் பனீர்

இந்த 'பாலக் பன்னீரை' விரும்பாதவர்களே கிடையாது எனலாம் புன்னகை

தேவையானவை :

பாலக் 2 கட்டு
பனீர் 500 கிராம்
எண்ணை 1/4 கப்
தயிர் 1/4 கப்
தனியாப்பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
கிராம்பு பொடி 1/2 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் அல்லது துருவிய பனீர் 1 ஸ்பூன் ( அலங்கரிக்க )

அரைக்க வேண்டிய பொருட்கள் :

பெரிய வெங்காயம் 2
பூண்டு 10 -12 பல்
இஞ்சி 1 துண்டு
கொத்துமல்லி தழை 1 கைப்பிடி அளவு
புதினா 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் 7 -8
நன்கு விழுதாக அரைக்கவும்

செய்முறை:

முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்துக்கொள்ளவும்.
மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும் .
தனியே வைக்கவும் .
வாணலி இல் எண்ணை விட்டு அரைத்த மசாலா விழுதை முதலில் போட்டு வதக்கவும்.
பனீர் ஐ துண்டுகளாக்கவும் .
எண்ணை பிரிந்து வரும்போது, பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
தனியாப்பொடி , சீரகப்பொடி, பட்டை பொடி ,ஏலப்பொடி ,கிராம்பு பொடி ,உலர்ந்த வெந்தய இலைகள் எல்லாம் போடவும்.
நன்கு கலக்கவும், இப்ப தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
கொதிக்கவிடவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
அருமையான 'பாலக் பனீர் ' தயார்.
ஒரு serving dish இல் எடுத்து வைக்கவும்.
துருவிய பனீர் அல்லது கிரீம் கொண்டு அலங்கரிக்கவும் .
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் முதலில் பனீர் துண்டுகளை எண்ணை இல் வறுத்து எடுக்கலாம்.

No comments: