Tuesday, November 20, 2018

முந்திரி உருண்டை

முந்திரி உருண்டை !

தேவையானவை :

உடைத்த முந்திரி   2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் - தேவையானால் மட்டும் சேர்க்கவும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான முந்திரி  உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்  அதுவும் நன்றாக இருக்கும் .

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை :

பொட்டுக்கடலை   2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான பொட்டுக்கடலை  உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்  

வேர்க்கடலை உருண்டை

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை :

உப்பில்லாமல் வறுத்த , தோலெடுத்த வேர்க்கடலை  2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான வேர்க்கடலை உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள் புன்னகை 

அப்பம் 2

அப்பம் 2

தேவையானவை:

கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:

அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
'அப்பம்' பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

அப்பம்

அப்பம் - இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப் 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்  
சோடா உப்பு 1 சிட்டிகை 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் 
பொறிக்க நெய் 
பூவன் வாழை பழம் 2 

செய்முறை:

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும். 
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப  குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று  இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

சுகியன்

சுகியன்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப் 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன் 
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப் 
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவுகளை  போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும். 
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும். 
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான்.  
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள  மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு  தயார் 

மனோகரம்

மனோகரம் ! 

மிகவும் அருமையான தித்திப்பு இது . எங்க அப்பாவிற்கு மிகவும் பிடித்தமானது...இதன் வித்தியாசமான சுவையால் நிறைய பேருக்கும் இது பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம் புன்னகை

தேவையானவை :

அரிசி மாவு 2  கப் 
பயத்தம் பருப்பு மாவு 1  கப் 
வெல்லம் 2 -  2  1 /2  கப் 
ஒரு சிட்டிகை உப்பு
பொறிக்க எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

மாவுகள் இரண்டையும் போட்டு உப்பு மற்றும் நெய் விட்டு, நன்கு கலக்கவும். 
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மிருதுவான மாவாக கலக்கவும். 
அடுப்பில் வாணலி இல் எண்ணெய்விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக்கொண்டு அதில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
கொஞ்சம் வெந்ததும் திருப்பிவிடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
இப்படியே எல்லா மாவையும் பிழிந்து கொள்ளவும்.
மற்றும் ஒரு அடுப்பில், வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
இதற்கு நடுவில் பிழிந்து வைத்துள்ள தேன்குழல்கள் கொஞ்சம் ஆறினதும் அவற்றை சிறிய துண்டுகளாக ஒடித்து வைத்துக் கொள்ளவும். 
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள தேன்குழல் அதாவது மனோகர துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான மனோகரங்கள் தயார்.
ஒருமுறை செய்து பாருங்கள் இது உங்களுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறிவிடும். புன்னகை

குறிப்பு: இரண்டு அரிசி ஒரு பயத்தம் பருப்பு என்ற அளவில் அளந்து  கொண்டு, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான பொது மனோகரம் செய்து கொள்ளலாம். பொதுவாக வெறும் பயத்தம் பருப்பில் செய்த பண்டங்களை பண்டிகைகளுக்கு , நல்லதுக்கு செய்வது வழக்கம் இல்லாத காரணத்தால், இதை செய்யும்போது ஜஸ்ட் இரண்டு கடலை பருப்பு போட்டு அரைக்கவேண்டும். கடை இல் வாங்கிய மாவில் செய்வதானால் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவேண்டும் புன்னகை

அவல் பொரி உருண்டை

அவல்  பொரி உருண்டை 

தேவையானவை :

2  கப் அவல்  பொரி 
ஒரு கப் துருவிய வெல்லம் 
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி 
கால் கப் தேங்காய்த் துண்டுகள் ( சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) 
அரிசிமாவு கொஞ்சம்

செய்முறை:

அவல்  பொரி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய வெல்லம் போடவும்.

அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகளை போடவும். 

நன்கு கொதித்து கெட்டியாகும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு

அதில் கொஞ்சமாக விடவும்.

அது உருட்டும் படி வந்தால் சரியான பதம்.

உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.

எடுத்து வைத்துள்ள அவல் பொரியை அதில் கொட்டி நன்கு கிளறவும்.

சூட்டுடன், அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

அவல் பொரி உருண்டை தயார்.

நெல் பொரி உருண்டை

நெல் பொரி உருண்டை

தேவையானவை :

2  கப் நெல் பொரி 
ஒரு கப் துருவிய வெல்லம் 
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி 
கால் கப் தேங்காய்த் துண்டுகள் ( சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) 
அரிசிமாவு கொஞ்சம்

செய்முறை:

நெல் பொரி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

'நெல் உமி 'இருந்தால் தொண்டையில் குத்தும். 

ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய வெல்லம் போடவும்.

அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகளை போடவும். 

நன்கு கொதித்து கெட்டியாகும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சமாக விடவும்.

அது உருட்டும் படி வந்தால் சரியான பதம்.

உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.

எடுத்து வைத்துள்ள நெல் பொரியை அதில் கொட்டி நன்கு கிளறவும்.

சூட்டுடன், அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

நெல் பொரி உருண்டை தயார்.

கார்த்திகை பட்சணங்கள்

எங்க வீட்டில் கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

Thursday, November 15, 2018

எரிசேரி

எரிசேரி 

 இதுவும் எங்க வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணுவது

தேவையானவை:

வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )

அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
உப்பு 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம் 

செய்முறை:

சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும். 
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். 
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும். 
வெந்த காயுடன் சேர்க்கவும்.
வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார். 
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் 

மலபார் அவியல்

மலபார் அவியல்   - தயிர் இல்லாத அவியல் புன்னகை

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2 
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்தது ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'அவியல்' ரெடி.

குறிப்பு: பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம்   சிலர்  கொத்தவரை கூட போடுவார்கள் .

மிளகாய் அவியல்

மிளகாய் அவியல் 

கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது 

தேவையானவை:

துவரம் பருப்பு – 1/2 கப் 
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது 

செய்முறை:

பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Blog Archive