பென்கன் கா பர்த்தா அதாவது கத்தரிக்காய் கொத்சு
தேவையானவை :
ஒரு பெரிய குண்டு கத்தரிக்காய்
ஒரு பெரிய பெங்களூர் தக்காளி
ஒரு பெரிய வெங்காயம்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
பொடித்த சீரகம் அரை ஸ்பூன்
பொடித்த 'கரம் மசாலா' அரை ஸ்பூன்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் (தேவையானால் )
தாளிக்க:
கடுகு
சீரகம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் கொஞ்சம்
செய்முறை :
கத்தரிக்காயை நன்கு அலம்பி, துடைக்கவும்.
கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
காஸ் ஸ்டவ் இல் நெருப்பில் காட்டி சுடவும்.
எல்லா பக்கமும் நன்கு சுட திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும், ஒரு பெரிய பேசினில் தண்ணீர் விட்டு இத போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
கையால் நன்கு பிசையவும்.
வெங்காயத்தை நறுக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
பிறகு இஞ்சி , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கின தக்காளி போடவும். பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போடவும்.
நன்கு வதக்கவும்.
மிளகாய் பொடி, சிரகப்பொடி, மஞ்சள் பொடி, பொடித்து வைத்த கரம் மசாலா பொடி என எல்லாம் போடவும்.
உப்பு போடவும்.
வெங்காயத்தை போடவும்.
அது நன்கு வதங்கினதும், கத்தரிக்காயை போடவும்.
அரை கப் தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை அடுப்பில் இருக்கட்டும்.
அப்ப அப்ப கிளறி விடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும் .
தேவையானால் கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விடவும்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.
கரம் மசாலா பொடி :கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.

No comments:
Post a Comment