கூட்டு பொடி !
இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி நாங்க வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி. பொரித்த கூட்டு செய்யத் தேவையான பொடி....வேண்டுமானால் நீங்கள் தினமும் அரைத்து செய்யலாம்.
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்.
Thursday, November 15, 2018
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2018
(29)
-
▼
November
(29)
-
▼
Nov 15
(19)
- எரிசேரி
- மலபார் அவியல்
- மிளகாய் அவியல்
- அவியல் 2
- அவியல்
- கச்சல் வாழைக்காய் கூட்டு
- ரசவாங்கி / கத்தரிக்காய் ரசவாங்கி
- பிட்லை / பாகற்காய் பிட்லை
- சங்கராந்திக்கூட்டு
- புளிக்கூட்டு
- 'ALL PURPOSE POWDER' / புளி கூட்டு பொடி
- கீரை கூட்டு
- மோர் கூட்டு
- மிளகு கூட்டு
- பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானத...
- பொரித்த கூட்டு
- கூட்டு பொடி
- கூட்டு வகைகள்
- கூட்டு வகைகள்
-
▼
Nov 15
(19)
-
▼
November
(29)
No comments:
Post a Comment