Wednesday, July 20, 2011

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் - கூழ் வத்தலுக்கு சமமான அந்தஸ்த்துடய வத்தல் . எங்கள் வீடுகளில் இதற்க்கும் பெரும் வரவேற்ப்புண்டு. போடுவது ரொம்ப ஈஸி. நல்ல சூப்பராக பொரியும். குழந்தை கள் பெரிதும் விரும்புவர்கள் . இதிலும் பல வகை உண்டு. அவற்றை இங்கு பார்போம்.

தேவையானவை :

1 கிலோ ஜவ்வரிசி
150 -200 கிராம் பச்சை மிளகாய்
1/2 பெருங்காய பொடி
உப்பு

செய்முறை :

முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு 2 -3 முறை களைந்து அது மூழ்கும் வரை திண்ணிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காலை இல் அடி கனமான உருளி இல் இதை போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாயை அலம்பி நன்கு அரைக்கவும்.
ஜவ்வரிசி வேக ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகை விழுது உப்பு மற்றும் பெருங்காய பொடி போட்டு கலக்கவும்.
எல்லமாக சேந்து நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும், பிளாஸ்டிக் ஷீட் இல் கரண்டியால் மொண்டு மொண்டு வத்தல் இடவும்.
நேரம் ஆக ஆக வத்தல் மாவு கெட்டியாகும்.
எனவே வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்த மாவையும் வாடாமாக இடவும்.
மதியம் அல்லது சாயந்திரம் வத்தல்களை பிச்சு திருப்பி போடணும்.
இருபுறமும் நன்கு காய்ந்ததும் ( கையால் உடைக்க வரணும் ) டப்பாக்களில் சேமிக்கவும்.
சரியாக செய்தால் வத்தல் பொறிக்கும் பொழுது 2 - 3 மடங்காக வெள்ளையாய் பொரியும்.

No comments:

Blog Archive