Wednesday, August 31, 2011

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

இனிப்புச் சட்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

செய்முறை:

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்க வேண்டும்.


புளிச் சட்னி

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.

இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.

இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.

அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

Tuesday, August 30, 2011

அரிசி வடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும் புன்னகை

Blog Archive