Wednesday, August 17, 2011

வெண்ணை முறுக்கு

வெண்ணை முறுக்கு - முறுக்கு என்றாலே வாயில் கரையனும். 'கடக்னூ' இருக்க கூடாது . அதிலும் இது வெண்ணை முறுக்கு அதனால் இது ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 3 -4 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல மெத்தென்று இருக்கணும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் , ஒரு கை நிறைய மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு சுற்ற வேண்டும். புன்னகை
மொத்த மாவையும் அப்படி கை முறுக்காக சுற்றவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, ஒவ்வொன்றாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'வெண்ணை முறுக்கு ' ரெடி .

குறிப்பு: முறுக்கு பதம் சரியா என் பார்க்க, நின்ற நிலை இல் ஒரு முருக்கை கீழே போடணும். ஓங்கி போடக்கூடாது, கை தவறி விழுவது போல் போடணும்.புன்னகை அப்ப அந்த முறுக்கு தூள் தூள் ஆக உடைந்தால் ரொம்ப சரியான பதம் இல்லா
விட்டால் ஊத்திக்கிச்சு என்று அர்த்தம் . சரியா? புன்னகை

சில முன்னேற்பாடுகள் அல்லது டிப்ஸ்

சில முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பக்ஷணங்களை சுலபமாக டென்ஷன் இல்லாமல் செயலாம் புன்னகை

வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா? புன்னகை

எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.

1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம்.

நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.

ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்காவின் தோலும் உபயோகப்படும்.

கோலம் போட 1/2 அரிசி யை நனைத்து வையுங்கள். சீடை பொறியும் போது ஒரு பக்கம் அரைத்து விடலாம்.

தேங்காய் யை உடைத்து 1 மூடி துருவவும். 1 மூடியை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும். சுய்யனுக்கும் துருவி வைக்கணும்.

இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்

வெல்ல சீடை

அடுத்தது வெல்ல சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கி வைத்தது 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
ஏலப்பொடி பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு உருளி இல் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய் , ஏலப் பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நன்கு கிளறவும்.
நெய்விடவும்.
கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடை யை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்லா மருதாணி பற்றியது போன்ற கலர் இல் - மெருன் கலரில் வரும் புன்னகை.
'கரகர' ப்பான 'வெல்ல சீடை ' ரெடி

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
இது வும் ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் புன்னகை
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்து கொண்டால் அப்பத்துக்கும் போடலாம்.
இது பெருமாளுக்கு நைவேத்தியம் என்பதால் வாயி இல் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. எனவே, சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம் . இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று அர்த்தம்

உப்பு சீடை

முதலில் உப்பு சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை' யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'உப்பு சீடை ' ரெடி புன்னகை

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது புன்னகை

1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் 'டாங்கர்' பச்சடி' செயல்லாம். செய்முறை அப்புறம் சொல்கிறேன்.

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள்

கிருஷ்ணஜெயந்திக்கு செய்யவேண்டியவை புன்னகை

கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .

சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் புன்னகை) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.

Blog Archive