Thursday, November 15, 2018

பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது

பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது புன்னகை 

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு 
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரைக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.

கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் மேலே சொன்ன கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 

ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு:இது பிள்ளை பெற்றவர்களுக்கான குறிப்பு...இதில் தேங்காய் பால் சேர்க்கலாம், அது  வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம் 

பொரித்த கூட்டு

பொரித்த கூட்டு  ! 

பொரித்த கூட்டு என்றால் புளி இல்லாமல் வெறும் காய்கறிகள் மற்றும் பருப்பை கலந்து செய்வது இதற்கு நீங்கள் பீன்ஸ், புடலங்காய், சௌ சௌ என்கிற பெங்களுர் கத்தரிக்காய், காரட், பீர்க்கங்காய்,சுரைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முட்டைக்கோசு, பருப்பு கீரை, பச்சை பப்பாளி அதாவது பப்பாளிக்காய், முருங்கை பூக்கள், அவரைக்காய் போன்றவற்றை  உபயோகிக்கலாம் .

இந்த கூட்டு செய்ய தேவையானவை:

மேலே சொன்னவற்றில் இருந்து ஏதாவது ஒரு காய் அரை கிலோ 
பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஒரு கப் 
கூட்டுப் பொடி 2 லிருந்து 3 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் 2 லிருந்து 3 டீஸ்பூன் 
பெருங்காய பொடி கால் டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் 
தாளிக்க கடுகு 
தாளிக்க உளுத்தம்பருப்பு 
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் கொத்துமல்லி 

செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தோல் சீவி வேண்டிய காயாக இருந்தால் தோல் சீவி நறுக்கவும். 

கீரையாக இருந்தால் வேர்களை நீக்கி பலமுறை அலம்பி நறுக்கவும்.

நறுக்கிய காய் மற்றும் பருப்பை மற்றும் பருப்பை குக்கரில் வைக்கவும் காய் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும் 3 அல்லது 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு ஆழமான உருளி அல்லது வாணலியில் தாளிக்க எண்ணை எடுத்துக் கொண்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.

கடுகு வெடித்ததும் கருவேப்பிலை போடவும் பிறகு வெந்த பருப்பு மற்றும் காயை அதில் கொட்டவும்.

இப்பொழுது அதில் அதில் கூட்டுப் பொடி, தேங்காய், உப்பு, பெருங்காயப்பொடி எல்லாம் போடவும்.

நன்கு கிளறி விடவும்.

ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.

பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான பொரித்த கூட்டு தயார்.

சுடுசாதத்தில் நெய் விட்டு இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு : உங்களுக்கு தேவையானால் இரண்டு காய்கறிகள் அல்லது 3 காய்கறிகள் கலந்து கூட்டு செய்யலாம். 

கூட்டு பொடி

கூட்டு பொடி !


இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி  நாங்க வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி. பொரித்த கூட்டு செய்யத் தேவையான பொடி....வேண்டுமானால் நீங்கள் தினமும் அரைத்து செய்யலாம்.

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 
ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்.

கூட்டு வகைகள்

முதலில் கூட்டு வகைகள் என்ன என்று பார்க்கலாம். பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் புன்னகை


பொரித்த கூட்டு
புளிக் கூட்டு 
மிளகு கூட்டு 
கீரைக்கு கூட்டு
மோர் கூட்டு 
சங்கராந்தி கூட்டு 
'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி'
அவியல்
பிட்லை மற்றும் 
எரிசேரி

கூட்டு வகைகள்

நம் தென்னிந்திய  சமையலில் கூட்டும்  ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை பார்க்கலாம்.

Blog Archive