Ingredients:
- பிரண்டை 1 கப் ( நரம்பு நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும்)
- கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
- தேங்காய் துருவல் 1 கப்
- சிவப்பு மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2 - 4
- இஞ்சி துருவியது 2 டேபிள் ஸ்பூன்
- புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
- எள் 2 ஸ்பூன்
Method:
- வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு பிரண்டையை நான்கு வதக்கவும்.
- தனியே வைக்கவும்.
- மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள், வறுத்து வைத்துள்ள பிரண்டை போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள இஞ்சி தேங்காய் பச்சடி செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Notes:
- பிரண்டை நறுக்கினதும் கையை புளி தண்ணீர் அல்லது வெந்நீரில் அலம்பவும். இல்லாவிட்டால் கை ரொம்ப அரிக்கும். வேறு எங்காவது உடம்பில் தொட்டாலும் அரித்து பிடுங்கும் ஜாக்கிரதை.
Ingredients:
- கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
- கடுகு 1/2 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2 - 4
- புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
- எள் 1 ஸ்பூன்
Method:
- வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Ingredients:
- கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
- சிவப்பு மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- புளி பேஸ்ட்- 2 spoon
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 spoon
Method:
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தேங்காய் தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Ingredients:
- கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
- சிவப்பு மிளகாய் - 4
- மிளகு - 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- புளி பேஸ்ட்- 2 spoon
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
Method:
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
- மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Notes:
- புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
- காய்ந்த கறிவேப்பிலை லும் இப்படி துவையல் செயலாம்.
Ingredients:
- புதினா - 1 கப்
- சிவப்பு மிளகாய் - 4
- மிளகு - 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- புளி பேஸ்ட்- 2 spoon
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
Method:
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் புதினா போட்டு வதக்கவும். நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.