Monday, October 5, 2020

கறிவேப்பிலை துவையல் 2

Ingredients:
  • கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
  • சிவப்பு மிளகாய் - 4
  • உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  • புளி பேஸ்ட்- 2 spoon
  • பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • எண்ணை - 1 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் 2 spoon


Method:
  • வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தேங்காய் தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
  • எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
  • சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

No comments:

Blog Archive