- கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
- கடுகு 1/2 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2 - 4
- புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
- எள் 1 ஸ்பூன்
Method:
- வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment