Tuesday, October 6, 2020

ஸ்ரார்த்த துவையல்

Ingredients:
  • பிரண்டை 1 கப் ( நரம்பு நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும்)
  • கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
  • தேங்காய் துருவல் 1 கப்
  • சிவப்பு மிளகாய் - 4
  • உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகு 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் 2 - 4
  • இஞ்சி துருவியது 2 டேபிள் ஸ்பூன்
  • புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • எண்ணை - 1 டீஸ்பூன்
  • எள் 2 ஸ்பூன்


Method:
  • வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு பிரண்டையை நான்கு வதக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
  • எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள், வறுத்து வைத்துள்ள பிரண்டை போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
  • சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள இஞ்சி தேங்காய் பச்சடி செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.


Notes:
  • பிரண்டை நறுக்கினதும் கையை புளி தண்ணீர் அல்லது வெந்நீரில் அலம்பவும். இல்லாவிட்டால் கை ரொம்ப அரிக்கும். வேறு எங்காவது உடம்பில் தொட்டாலும் அரித்து பிடுங்கும் ஜாக்கிரதை.

No comments:

Blog Archive