Ingredients:
- பச்சரிசி - அரை கப்
- பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- நெய் 1/2 கப்
- முந்திரிப் பருப்பு - 10 - 12
- திராக்ஷை 10 -12
- ஏலக்காய் - 5
- பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
- பால் - 2 கப் - 2 1/2 கப்
- பொடித்த வெல்லம் - 2 கப்
Method:
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
- பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
- பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
- அப்பப்போ கிளறனும்.
- அது பாட்டுக்கு வேகட்டும்.
- இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
- அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
- அருமையான இனிப்பு இது.
Notes:
- இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்
- மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்.
- அக்கார அடிசில் ...............இது எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் கோவில்களில் ரொம்பவும் பிரபலமாக பாயசம். ஐயங்கார் புளிக்காச்சல் - புளியோதரை போல த்தான் அக்கார அடிசிலும் குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் நிறைய நெய்யும் பாலும் கலந்து இதை செய்வோம்
-
- பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும் செய்து பாருங்களேன் !
Ingredients:
- 2 தக்காளி - கெட்டியானதாகவும், பெங்களுர் தக்காளியாகவும் இருக்க வேண்டும்.
- 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
- பச்சை மிளகாய் - 4 -6
- இஞ்சி 2 -3 இன்ச் அளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை ஒரு ஆர்க்
Method:
- பச்சைமிளகா, இஞ்சி,உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
- கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
- பொடியாக நறுக்கின தக்காளியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
- அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
- எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
Ingredients:
- 1 கப் ஜவ்வரிசி
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- இரண்டு ஸ்பூன் எண்ணெய்
Method:
- வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
- இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.
- அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
Ingredients:
- 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
- 1 கப் ஜவ்வரிசி
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- இரண்டு ஸ்பூன் எண்ணெய்
Method:
- வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
- இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
- ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
- பரிமாறுவதற்கு முன், நன்றாக ஊறி உள்ள ஜவ்வரிசி பச்சடி மேல் கொட்டவும்.
- நன்கு கலக்கி பரிமாறவும்.
- அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
Notes:
- சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். அதனால் ஆறினதும் சேர்க்கவும் . அப்படி உடனே போடும் பட்ஷத்தில் கூட உள்ள ஜவ்வரிசி அந்த நீரை உறிஞ்சிவிடும். பச்சடி கெட்டியாக இருக்கும்.
Ingredients:
- 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- அரை ஸ்பூன் எண்ணெய்
Method:
- தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
- ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
- தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- இதன் மேல் கொட்டவும்.
- அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
Notes:
- சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
- சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.