Ingredients:
- நன்கு பழுத்த நான்கு வாழைப்பழங்கள்
- ரெண்டு டேபிள் ஸ்பூன் peanut butter
- சின்ன சின்ன சாக்கோ சிப்ஸ்
Method:
- வாழைப்பழங்களை தோலுரித்து, ஒரு zipper கவர் இல் போட்டு, இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை பிரீஸரில் வைக்கவும்.
- எடுக்கும்போது அவை கட்டை போல் இருக்க வேண்டும்.
- அதை மிக்சி இல் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வெளியே எடுத்து peanut butter கலந்து சாக்கோ சிப்ஸ் போட்டு ஒரு டைட்டான மூடியுள்ள டப்பாவில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும்.
- இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
- அருமையாக இருக்கும்.
Notes:
- இந்த ஐஸ் கிரீமை செய்து , குறைந்த நேரத்தில் செய்து குழந்தைகளை குஷிப் படுத்தலாம் . ஆமாம் ரொம்ப நேரம் தேவை இல்லை குறைந்த நேரம், குறைந்த செலவு, நிறைந்த மகிழ்ச்சி... நடனம் நடனம் நடனம்
Images:



Ingredients:
- வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்
- ( கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும் )
- பூண்டு 6 - 8 பற்கள்
- ஒரு சிறிய எலுமிச்சை இன் சாறு
- வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் அல்லது ரீபைண்ட் ஆயில் 1 /2 - 3 /4 கப்
- உப்பு
Method:
- எண்ணெய் தவிர எல்லாவற்றையும் மிக்சிஜாரில் போடவும்.
- பாதி எண்ணையை விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து மிக்சியை இயக்கவும்.
- கொத்துக்கடலை நன்கு மசிந்து விடும்.
- அதை நன்கு கிளறி விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
- எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
- கூடாது கூடாது கூடாது
- அரைக்க லகுவாக இருக்க எண்ணெய் மட்டுமே சேர்க்கலாம்.
- நல்ல கெட்டியான துவையல் பதம் வரும் வரை அரைக்கவும்.
- இதுவும் நல்ல வெண்ணைபோல இருக்கும்.
- கலரும் 'வெள்ளை வெளீர்' என்று இருக்கும் .
- அவ்வளவுதான், மிக்சி இல் இருந்து எடுத்து பாட்டிலில் சேமிக்க வேண்டியது தான்.
- கையோடு பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
- தேவையான போது , கிண்ணி இல் எடுத்துக் கொண்டு மேலே கொஞ்சம் ஆலிவ் ஆயில் விட்டு பரிமாறவேண்டியது தான்.
- ஒருமுறை செய்து பாருங்கள், மெலிதான பூண்டு மணத்துடன் அருமையாக இருக்கும், 'சில்'
- என்கிற 'ஹம்முஸ்'
Notes:
- "ஹம்முஸ்" என்று சொல்லப்படும் ஒரு 'சைடு டிஷ்' இது அரேபிய உணவு ! செய்வது மிக எளிது ஆனால் ருசியோ அபாரம். இதை அங்கு 'குபூஸ்' என்று சொல்லப்படும் ரொட்டியுடன் தருவார்கள்.
- இங்கு நாம் இதை சப்பாத்தி , நான் , பிரட் என்று எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். எப்பவும் 'சில்' என்று இருக்கவேண்டும் இது, எனவே சிலநாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். என்றாலும் பிரெஷ் ஆக ஓரிரு நாட்களில் உபயோகித்தல் நலம்
Images:

Ingredients:
- Beans -10 pieces
- Carrots - 2 medium sized carrots
- Peas - 1 Handful
- Onions - 2 medium sized onions
- Green chilles - 4 nos
- Garlic - 10 nos
- Chopped Ginger - 1 tbsp
- Ghee - 4tsp
- Oil - 2tsp
- Salt to taste
- Bay leaves - 1
- Basmati rice -2 cups
- Lemon juice - 1tsp
- Saffron - 10-12 pieces
- Biryani Masala Powder :
-
- Dhaniya seeds - 2tbsp
- Bay leaves - 2
- Red Chilly round - 4
- Cinnamon sticks - 2
- Cloves - 1tsp
- Cumin seeds - 1tsp
- mace - 2
- nutmeg small - 1
- Black cardomom - 2 to 3
- Star anise - 7 to 8
- Green cardomom - 10 to 12
- Pepper - 2tsp
- Sonf - 1tsp
Method:
- First dry fry all the malasa items one by one and then grind it.
- Wash and drain basmathi rice.
- In kadai, pour a tsp of ghee and then fry the bay leaves.
- Then fry the drained basmathi rice along with it.
- Then put this in a cooker vessel or Rice cooker.
- Again pour a tsp of ghee in kadai and add all the chopped vegetables one by one into the kadai and fry well.
- Side by side grind the green chilly, ginger and onion in a mixie grinder.
- Then pour the grinded masala into the kadai along with the vegetables and mix well.
- Then add salt and one tbsp briyani masala powder to it and mix well.
- After it has cooked well, pour this masala into the basmathi rice and mix well.
- Then pour 4 cups of water into it and then add 1 tsp lemon juice and 1 tsp oil.
- Then mix well and add salt if required.
- If you are using pressure cooker keep it for 3 whistles.
- Put saffron strands in a cup of little water.
- After taking out the Briyani, pour the saffron water into it and mix well.
- Now its ready to serve.
- Onion raitha is the best side dish for this.
Notes:
- Instead of big onion you can use small onion also. It will give nice taste
Images:


Ingredients:
- ஒருபத்து பீன்ஸ்
- ரெண்டு காரட்
- ஒரு கை உரித்த பச்சை பட்டாணி
- ரெண்டு வெங்காயம்
- நான்கு பச்சை மிளகாய்
- பத்து பல் பூண்டு
- ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
- நான்கு டீஸ்பூன் நெய்
- இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
- உப்பு
- பிரிஞ்சி இலை ஒன்று
- பாசுமதி அரசி ரெண்டு கப்
- ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
- குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள்
- பிரியாணி மசாலா பொடி அரைக்க :
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பிரிஞ்சி இலை 2
- மிளகாய் வற்றல் 4
- பட்டை 2
- கிராம்பு 1 டீ ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- ஜாதி பத்திரி 2 பூ
- ஜாதிக்காய் சின்னது ஒன்று
- பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று
- அன்னாசிப்பூ 7 - 8
- ஏலக்காய் 10 - 12
- மிளகு 2 டீ ஸ்பூன்
- சோம்பு 1 டீ ஸ்பூன்
Method:
- முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும்.
- ஆறினதும் பொடிக்கவும்.
- பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
- பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
- அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
- அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
- தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
- இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
- அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
- ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
- அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணை விடவும்.
- நன்கு கலந்து விடவும்.
- ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும்.
- குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
- மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
- குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
- வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
- இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
Notes:
- பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்
Images:


Ingredients:
- நெல்லிக்காய் 1/2 கப்
- சாதம் 1 கப்
- APP 2 - 3 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
- உப்பு
- எண்ணை கொஞ்சம்
- தாளிக்க :
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு துருவி வைத்துள்ள நெல்லிக்காய்யை போடவும்.
- உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
- பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
- எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
- ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
- பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
- மணமாக நல்லா இருக்கும்.
- இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்
Notes:
- நெல்லிக்காய்யை 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்