Friday, October 9, 2020

சௌதி 'கர கர' சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Method:
  • அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
  • தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
  • இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
  • பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
  • காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
  • உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
  • நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
  • ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
  • பிரயாணங்களை ஏற்றது.

Notes:
  • அங்கு ( சௌதி) கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும் .

மைதா பரோட்டா 2

Ingredients:
  • மைதா மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
  • சோடா உப்பு - அரை சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
  • பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
  • இதே போல எல்லா மாவையும் பெரிய பெரிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
  • முதலில் ஒன்றை மேடைமேல் வைத்து, அதன் மேல் நெய்யை தாராளமாக தடவவும்.
  • அடுத்த சப்பாத்தியை அதன் மேல் போடவும்.
  • இதேபோல குறைந்தது ஆறு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
  • பிறகு அதை மெல்ல சுருட்டவும்.
  • இப்புதுசு அதை குறுக்கு வாட்டில் ஆறு துண்டுகளாக 'கட்' செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது அதை கனமான பரோட்டாவாக இடவும்.
  • தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
  • வரி வரியாக, ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.

மைதா பரோட்டா

  • அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
  • இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
  • மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
  • இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
  • ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.

சௌதி 'கர கர' சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Method:
  • அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
  • தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
  • இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
  • பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
  • காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
  • உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
  • நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
  • ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
  • பிரயாணங்களை ஏற்றது.

Notes:
  • அங்கு ( சௌதி) கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும்

மைதா பரோட்டா 2

Ingredients:
  • மைதா மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
  • சோடா உப்பு - அரை சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
  • பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
  • இதே போல எல்லா மாவையும் பெரிய பெரிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
  • முதலில் ஒன்றை மேடைமேல் வைத்து, அதன் மேல் நெய்யை தாராளமாக தடவவும்.
  • அடுத்த சப்பாத்தியை அதன் மேல் போடவும்.
  • இதேபோல குறைந்தது ஆறு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
  • பிறகு அதை மெல்ல சுருட்டவும்.
  • இப்புதுசு அதை குறுக்கு வாட்டில் ஆறு துண்டுகளாக 'கட்' செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது அதை கனமான பரோட்டாவாக இடவும்.
  • தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
  • வரி வரியாக, ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.

மைதா பரோட்டா

Ingredients:
  • மைதா மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
  • சோடா உப்பு - அரை சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
  • பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
  • அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
  • இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
  • மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
  • இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
  • ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.

வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப்
  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்
  • இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

Method:
  • காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெயை விட்டு, அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • இதுதான் பூரணம்; இது நல்லா கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.
  • பிசைந்த மாவிலிருந்து, கொஞ்சம் எடுத்து சின்ன சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவே ஒரு காய்கறி உருண்டையை வைத்து, கொழுக்கட்டை போல மூடி, கைகளால் பரத்தி, பிறகு மெல்ல சப்பாத்தியாக இடவும்.
  • பிறகு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு எடுங்கள்.
  • அருமையான, வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
  • எஸ், இதற்கும் தயிர் தான் .

முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா ! பச்சை பயிறு ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பூரணத்துக்கு:
  • முளைப்பயறு - முக்கால் கப்
  • பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ( தேவையானால் )
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்

Method:
  • முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ஆறியவுடன் பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • வாணலி இல் எண்ணெயைவிட்டு, அரைத்த விழுதை போட்டு , உப்பு போட்டு வதக்கவும்.
  • வாசனை போன பிறகு, அந்த விழுதுடன் பனீர் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு , நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, சொப்பு போல செய்து, மெல்ல இடவும்.
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • சரியாக வராவிட்டால், ஒரு சப்பாத்தி இன் மேல் பூரண கலவை வைத்து பரத்தி, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி மேலடுவாக தோசைக்கல்லில் போட்டு, இரண்டுபக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான, 'பச்சை பசேல்' என்கிற முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா தயார்.
  • வழக்கம் போல கெட்டி தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள .

Notes:
  • இதில் எலுமிச்சை சாறுக்கு பதில் தக்காளியும் சேர்க்கலாம். அல்லது ஆம் சூர் சேர்க்கலாம்.

ஸ்வீட் ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு:
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • முந்திரிப்பருப்பு - 50 கிராம் அல்லது ஒரு கைப்பிடி அளவு
  • சர்க்கரை - அரை கப் பொடித்து வைத்துக் கொள்ளவும்
  • ஏலக்காய் பொடி அல்லது வெனிலா எசன்ஸ் - சிறிதளவு.

Method:
  • தேங்காயுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் விடவேண்டாம்.
  • அதனுடன் சர்க்கரை சேர்த்து வெனிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
  • சிறிதளவு மாவு எடுத்து கிண்ணம் போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும் .
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு வேகவிட்டு எடுக்கவும் .
  • குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள் இதை.

Notes:
  • தித்திப்பு என்பதால் ஓட்டும் , இடும்பொழுது கவனம் தேவை. மிகவும் கஷ்டமாக இருந்தால், ஒரு போலாஸ்டிக் கவரில் வைத்து கைகளால் தட்டி சின்ன சின்ன பூரி சைசில் செய்து தோசை கல்லில் போட்டு எடுத்து பரிமாறுங்கள்
  • அப்படி சின்ன சின்னதாக செய்வதானால், கொதிக்கும் பாலில் போட்டு பால் போளி போலவும் பரிமாறலாம்.

பனீர் ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • துருவிய பனீர் - 2 கப்
  • மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • துருவிய பனீரை வாணலி இல் போட்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சீரகப்பொடி போட்டு நன்கு கிளறவும்.
  • அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ளவும்.
  • கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், ஓரிரு நிமிடங்களில், எல்லாமாக சேர்ந்து உருண்டை போல திரண்டு வரும்; அப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  • தட்டில் கொட்டி பரத்திவிடவும்; அது நன்கு ஆறட்டும்.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல பனீர் கலவையை வைத்து ) முடிவிடவும்.
  • பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு ஆலு ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
  • பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

Notes:
  • காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டாக்கு அடுத்தது இதுதான் ...மிகவும் அருமையாக இருக்கும்.
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
  • பூரணத்துக்கு:
  • முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • தனியா பொடி - அரை டீஸ்பூன்
  • கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

Method:
  • பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
  • ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
  • அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • (தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
  • பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
  • ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து
  • ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
  • பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
  • பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
  • ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

Notes:
  • உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா ! / காலிஃப்ளவர் பரோட்டா !
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

மேரி பிஸ்கட் கேக்

Ingredients:
  • 125 gms - மேரி பிஸ்கட்
  • 50gms - சர்க்கரை
  • 30gms - வெண்ணெய்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • 1-1.5 கப் பால்
  • 5 gms Eno Fruit Plain Salt

Method:
  • அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
  • 125 கிராம் மேரி பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
  • 50 கிராம் சர்க்கரை சேர்த்து பிஸ்கட்டுடன் ஒரு பொடியாக அரைக்கவும்.
  • அடுப்பில் 30 கிராம் வெண்ணெய் உருக்கி, கலவையில் சேர்க்கவும்.
  • வெண்ணிலா எசன்ஸ் ஒரு சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.
  • கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
  • வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
  • கலவையில் 5 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்
  • நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
  • இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
  • சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
  • ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
  • பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
  • உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
  • பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

Notes:
  • தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
  • இதில் நீங்கள் கிரீம் பிஸ்கட் பயன்படுத்தினால், சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எசென்ஸ் ஆகியவற்றின் கலவையைத் தவிர்க்கலாம் .. கிரீம் தானே இனிப்பு சுவை தரும் என்பதால்

ஆரஞ்சு பிஸ்கட் கேக்

Ingredients:
  • 200gms - ஆரஞ்சு பிஸ்கட்
  • 1-1.5 கப் பால்
  • வெண்ணெய் அல்லது நெய்
  • 6 gms ENO Fruit plain Salt

Method:
  • அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
  • 200 கிராம் கிரீம் - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour ஆனாலும் ஓகே தான் பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
  • கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
  • வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
  • கலவையில் 6 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்
  • நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
  • இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
  • சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
  • ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
  • பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
  • உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
  • பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

Notes:
  • தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
  • 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் . ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிரைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம் .

Images:

Marie Biscuit Cake

Ingredients:
  • 125 gms Marie biscuit
  • 50gms Sugar
  • 30gms butter
  • Vanilla essence
  • 1-1.5 cups of Milk
  • Butter/ Ghee for greasing
  • 6gms ENO plain salt
  • Cashew for toppings (optional)

Method:
  • Keep the cooker on your stove with water and start heating it.
  • Take 125 grams of Marie biscuit
  • put the biscuits in a mixer grinder and make it into powder
  • Add 50 grams of sugar and grind it as a powder along with biscuit
  • Melt 30 grams of butter in oven and add to the mixture
  • Add a few drops of vanilla essence into the mixture
  • Transfer the mixture now in to a mixing bowl and slowly add milk and the consistency should be like sauce (approx 1-1.5 cups)
  • Take a vessel of choice and grease it with butter/ghee and keep it aside
  • Add 6 grams of plain eno fruit salt into the mixture and start mixing it
  • Pour this mixture into the baking vessel that you have prepared
  • Keep this vessel into the cooker and steam it for 20 minutes do not put weight
  • Switch off the stove take the vessel out let it cool down
  • Turn the vessel upside down on a plate
  • Your vannila cake is ready to serve.
  • Optionally you can make some topping for the cake.

Orange Cream Biscut cake

Ingredients:
  • 200gms orange biscuits
  • 1-1.5 cups of Milk
  • Butter or ghee for greasing
  • 6gms ENO plain salt
  • Cashew for topping (optional)

Method:
  • Keep the cooker on the gas stove with water and start heating.
  • Take 200g of cream - chocolate or orange or any flavour of your choice - biscuits.
  • Put the biscuits in a mixer grinder.
  • Now put the mixture into a bowl and slowly add the milk, to the same extent as the tomato sauce
  • (approximately 1-1.5 cups of milk is needed).
  • Take a round vessel and grease it with butter or ghee.
  • Put 6g of Eno Fruit salt - plain salt into the mixture.
  • Pour the cake mixture into the vessel you prepared.
  • Place the vessel in the cooker and let it steam for 20 minutes.
  • In exactly 20 minutes, turn off the stove and take out the vessel and let it cool.
  • Put a plate on top of the vessel and reverse it with the tray.
  • Then gently tap a plate over the top of the vessel and pick up the vessel.
  • Your lovely cake will fall into the tray.
  • Gently serve the pieces.

Notes:
  • Fantastic cake in the cooker, in 20 minutes. Yes, with any biscuit you can make this cake; without any struggle. I've done it so many times, so you also give a try for your children or husband or family.

Images:

லட்சா பரோட்டா கோதுமை பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
  • சோடா உப்பு - அரை சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்னெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
  • பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
  • அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
  • இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
  • மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
  • இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
  • ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.

Notes:
  • நாம் மைதாவில் பரோட்டா செய்வோம் வடக்கே கோதுமை பரோட்டாவும் செய்வார்கள். பிரி பிரியாக நன்றாக இருக்கும் அது. அதை எப்படிச்செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

சோயா சங் பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • சோயா சங் / உருண்டைகள் 20 / 30 அல்லது சோயா க்ரானுல்ஸ் - 1 /2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசவும்.
  • நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
  • கரம் மசாலா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான சோயா சங் பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

Notes:
  • சோயா சங் இல்லாமல் தூளாக கிடைத்தால், அதை அப்படியே தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிழிந்து உபயோகிக்கவும்.
  • ஒருவேளை பச்சை வாசனை வருமே என்று நீங்கள் நினைத்தால், வாணலி இல் ஒருமுறை புரட்டி எடுத்து பின் உபயோகிக்கவும்.
  • இந்த சங்கை தனியே பொடித்து வைத்துக் கொண்டு, கரம் மசாலா கலந்து, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
  • சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை ஸ்பூன்
  • உப்பு - ஒரே ஒரு சிட்டிகை
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு , ஏலப்பொடி போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான, இனிப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் தேன் விட்டுக்கொள்ளலாம் அல்லது நெய் விட்டுக்கலாம்.

Notes:
  • 1 ) இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியே மசித்து வைத்துக் கொண்டு, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
  • 2 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

முள்ளங்கி பரோட்டா - 2

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
  • பூரணத்துக்கு:
  • முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • தனியா பொடி - அரை டீஸ்பூன்
  • கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

Method:
  • பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
  • ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
  • அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • (தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • பிறகு, ஒரு சப்பாத்தியை இட்டு, அதன் மேல் பூரணத்தை பரவலாக வைத்து , அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும்.
  • ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
  • கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.

முள்ளங்கி பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
  • பூரணத்துக்கு:
  • முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • தனியா பொடி - அரை டீஸ்பூன்
  • கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

Method:
  • பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
  • ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
  • தண்ணீர் வேண்டி இருக்காது.
  • ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
  • நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
  • வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.

வெந்தயக் கீரை சப்பாத்தி மேத்தி பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
  • வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
  • வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
  • பச்சை மிளகாய் 8 - 10
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
  • இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
  • சுவையான மேத்தி பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் .

உருளைக்கிழங்கு ஆலு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு - 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான ஆலு பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

காலிஃப்ளவர் பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • பூவில் இருக்கும் ஈரமே போதும்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான காலிஃப்ளவர் பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
  • உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் பரோட்டா .

மங்களூர் போண்டா

Ingredients:
  • மைதா மாவு - 1 கப்,
  • சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
  • சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
  • பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
  • சீரகம் - ஒரு ஸ்பூன்
  • மிளகு - ஒரு ஸ்பூன் ( தேவையானால் )
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - ருசிக்கேற்ப,
  • எண்ணெய் - தேவையான அளவு.

Method:
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். :)
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
  • நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.
  • சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
  • சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி.
  • தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

காக்ரா கரகரப்பான சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்.

Method:
  • மாவை உப்பு சேர்த்து, ‘மெத்’தென்று பிசைந்து கொள்ளவும்.
  • மிக மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போடவும்.
  • எண்ணெய் தடவத் தேவையில்லை.
  • இரண்டு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு, கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கவும்.
  • சப்பாத்திகள் அப்பளம் போல நன்கு மொறுமொறுப்பாக வரும்வரை, இப்படியே திருப்பித் திருப்பிவிட்டு, துணியால் அழுத்திவிட்டு எடுத்தால், ‘கரகர’ காக்ரா ரெடி.
  • காக்ராவை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போகாது.
  • பயணங்களுக்கு ஏற்றது.

Notes:
  • இதில் மேத்தி இலைகள் அதாவது வெந்தயக் கீரை இலைகள் சேர்த்தும் செய்யாலாம், அல்லது மசாலா போட்டும் செய்யலாம். மீந்து போன சப்பாத்திகளை ஓவனில் காயவைத்தும் வைத்துக் கொள்ளலாம்.

புல்கா அதாவது மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 'மெத்' என்று பிசைந்து கொள்ளவும்.
  • அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, ஓரளவிற்கு மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
  • பிறகு, தோசைக்கல்லை காய்ந்ததும், இட்ட சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் திருப்பித் திருப்பிவிடவும்.
  • பிறகு, பக்கத்து அடுப்பில், மிதமான தீயில், சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியைப் போட்டால் அது நன்கு எழும்பி வரும்.
  • அவ்வாறு வந்தபின், திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
  • இதுதான், எண்ணெயில்லாத புல்கா.
  • புல்காவை எடுத்தபிறகு அதன் மேலே விருப்பம் போல, நெய் தடவி அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
  • எந்த சப்ஜியுடனும் இது நன்றாக இருக்கும்.

Notes:
  • புல்காவுக்காக, சப்பாத்தி இடும் போது ஒரே சீராகத் இடவேண்டும். ஒரு பக்கம் கனமாக வும், ஒரு பக்கம் லேசாகவும் இருந்தால் எழும்பி வராது. மாவு நல்ல 'மெத்' என்று இருக்கவேண்டும். மேலும், எப்பொழுதுமே சப்பாத்தி இடும்பொழுது, ஒரே பக்கமாக இடவேண்டும், திருப்பி போட்டு திருப்பி போட்டு இடக்கூடாது.

காரட் மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • துருவிய காரட் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
  • 'ஆம் சூர்' எனப்படும் மாங்காய் பொடி - ஒரு ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, 'ஆம் சூர்', கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • சுவையான காரட் மசாலா சப்பாத்தி தயார்.

காரட் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • துருவிய காரட் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • நமக்கும் பார்க்க ஆரஞ்சு கலரில் உள்ள சப்பாத்தி பிடிக்கும்.

காரட் இனிப்பு சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்தகாரட் (நடுத்தரமான அளவு) - 2
  • வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்

Method:
  • காரட்டை வெல்லத்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.

பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
  • வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்

Method:
  • பீட்ருட்டை வெல்லத்த்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.

பீட்ரூட் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
  • இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
  • மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • உப்பு - தேவையான அளவு.

Method:
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

கார மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - அரை ஸ்பூன்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
  • அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
  • கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
  • காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

Notes:
  • இதில் மிளகாய் பொடிக்கு பதில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்து விட்டும் மசாலா சப்பாத்தி செய்யலாம்.

கார சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
  • அதில் மிளகாய் பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
  • கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
  • காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

க்ரீன் மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு.
  • மசாலாவிற்கு :
  • புதினா - 2 கைப்பிடி
  • மல்லித்தழை - 2 கைப்பிடி
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 3 - 5 பல்
  • பச்சை மிளகாய் - 3 - 5
  • உப்பு - தேவையான அளவு

Method:
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
  • தண்ணீர் மட்டா விடுங்கள்.
  • மாவுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு அரைத்த விழுதை போட்டு நன்கு மென்மையாக பிசையுங்கள்.
  • தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
  • மெல்லிய சப்பாத்திகளாக இட்டு , தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
  • கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான க்ரீன் மசாலா சப்பாத்தி ரெடி.
  • எப்பொழுதும் போல் இதற்கும் தயிர் தான் சூப்பர் ஆக இருக்கும் .

பச்சை சோள கார்ன் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
  • நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

Method:
  • சோளத்தை துருவிக் கொள்ளவும்.
  • அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
  • இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.

Notes:
  • அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

பச்சை பட்டாணி சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200 கிராம்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
  • நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

Method:
  • பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.

Notes:
  • அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

ஆப்பிள் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பெரிய ஆப்பிள் - 1
  • சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - ஒரு சிட்டிகை,
  • நெய் - 2 டீஸ்பூன்

Method:
  • ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.
  • மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
  • இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
  • எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

வாழைப்பழ சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • கனிந்த வாழைப்பழம் - 1 - 2
  • சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - ஒரு சிட்டிகை,
  • நெய் - 2 டீஸ்பூன்

Method:
  • வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
  • மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
  • இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
  • நெய் விட்டும் கொடுக்கலாம்.
  • எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

வெந்தயக் கீரை சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
  • வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
  • வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
  • பச்சை மிளகாய் 8 - 10
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
  • இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
  • சுவையான மேத்தி சப்பாத்தி தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

மிகவும் மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கரண்டி நல்லெண்ணெய்
  • 2 கரண்டி நெய்
  • உப்பு

Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • ஒரு துணியால் அழுத்திவிடவும்.
  • அது 'புஸு புஸு' என்று உப்பி வரும்.
  • இருபுறமும் திருப்பிப்போடவும்.
  • அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
  • அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

டிரை புரூட்ஸ் லட்டுகள் 2

Ingredients:
  • வால்நட் 250 கிராம்
  • பேரீச்சை 250 கிராம்
  • உலர்ந்த திராட்சை 250 கிராம்
  • பாதாம் 250 கிராம்
  • வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
  • கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது புன்னகை
  • பொட்டுக் கடலை 250 கிராம்
  • வறுத்த வேர்கடலை 250 கிராம்
  • கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
  • தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
  • வெல்லம் 100 கிராம்
  • தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு

Method:
  • தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
  • அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.

Notes:
  • தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
  • குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன் புன்னகை
  • இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம் :)

Dry Fruits Laddus

Ingredients:
  • 250 g Walnut
  • 250 g Dates
  • 250 grams dried grapes
  • 250 g of almonds
  • 250 g Melon seeds
  • A little cashew, A little pistachio give good taste but better to skip it.
  • 250 g of prossed channa dal ( Pottukkadalai )
  • 250 g of roasted peanuts
  • A handful of dry Coconut pieces (if needed)
  • 125 g of millet (thinai)
  • 100 g of Jaggery
  • Honey - as per requirement ( we have to make laddu )

Method:
  • Dry fry Millet (thinai)
  • You must get good aroma from it. Keep aside.
  • Bring it to room temp. then grind it as fine powder.
  • Then put all the other ingredients into a mixer grinder and just inch it.
  • Put them on a plate and pour honey.
  • Make small small laddus out of it.
  • Delicious and nutritious 'Dry Fruits Laddus' ready to serve.

Notes:
  • You can also add sugar candy or palm jaggery or palm candy instead of jaggery .
  • Instead of a 'inching' in the mixie, you can cut all dry fruits into small pieces and just powder the Millet and then make laddu.
  • Children and adults can eat this .... you can make small small laddus say , 30 - 35 grams; and you can take two for breakfast and go to school / office. You will not feel hungry till noon. All of the above are maximum protein and Omega3. So it is good for health. Cashews and pistachios are rich in cholesterol . That's why I asked you to add less quantity or don't add atall.
  • This can also be called Power Balls ! :)

பம்பாய் ரவா பாயசம்

Ingredients:
  • பம்பாய் ரவை ஒரு கப்
  • சர்க்கரை 2 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, ரவையை போட்டு வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ரவை நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
  • நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, பம்பாய் ரவா பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
  • மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

சேமியா ரவா பாயசம்

Ingredients:
  • சேமியா ஒரு கப்
  • பம்பாய் ரவை ஒரு கப்
  • சர்க்கரை 3 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவை வறுக்கவும்.
  • அதிலேயே ரவையை போட்டு வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ரவை, சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
  • அவை நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, சேமியா ரவா பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
  • மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

சேமியா பாயசம்

Ingredients:
  • சேமியா ஒரு கப்
  • சர்க்கரை 2 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
  • தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
  • சேமியா நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, சேமியா பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
  • மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

ஜவ்வரிசி சேமியா பாயசம்

Ingredients:
  • ஜவ்வரிசி ஒரு கப்
  • சேமியா ஒரு கப்
  • சர்க்கரை 2 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
  • பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
  • இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • சேமியாவும் ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
  • தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
  • ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, ஜவ்வரிசி சேமியா பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • ஜவ்வரிசி சேமியா இரண்டையும் வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
  • தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.
  • மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

ஜவ்வரிசி அவல் பாயசம்

Ingredients:
  • ஜவ்வரிசி அரை கப்
  • மெல்லிய அவல் ஒரு கப்
  • சர்க்கரை 2 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
  • பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
  • இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, அவலையும் வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • அவல் சீக்கிரம் வேகும், அதனால் அடிபிடிக்கும் அபாயம் உண்டு... அதனால் நடுநடுவில் கிளறிவிடவும்.
  • ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
  • தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
  • ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, ஜவ்வரிசி அவல் பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
  • தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.
  • மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.

ஜவ்வரிசி பாயசம்

Ingredients:
  • ஜவ்வரிசி 1 கப்
  • சர்க்கரை 2 கப்
  • பால் 1 கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
  • ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
  • பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • ஜவ்வரிசி நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
  • தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
  • ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, ஜவ்வரிசி பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.

பூரி பாயசம்

Ingredients:
  • மைதா 200 கிராம்
  • ரவா 50 கிராம்
  • சர்க்கரை 300 கிராம்
  • பால் 500 மில்லி
  • ஏலக்காய் தூள் ½ sp
  • குங்குமப்பூ 12 இழைகள்
  • முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  • பொறிக்க எண்ணெய்
  • உப்பு

Method:
  • மைதா மற்றும் ராவா இரண்டையும் ஒரு பேசினில் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  • சப்பாத்தி மாவைவிட கெட்டியாக இருக்கட்டும்.
  • இதை அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைத்திருங்கள்.
  • சிறிய சிறிய பூரிகளாக இடுங்கள்.
  • அவற்றை ஒரு முள் கரண்டி உதவியுடன் துளைகளை போடுங்கள்.
  • அதனால் பூரிகள், உப்பாமல், கரகரப்பாக பொறியும்.
  • அவற்றை எண்ணெயில் நன்கு பொறிக்கவும்.
  • ஒரு ஆழமான வாணலியில் பால் ஊற்றி அதில் முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் சேர்க்கவும்.
  • அதை ஒரு கொதி வரட்டும்.
  • ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
  • நன்றாக கலந்து இப்போது அதில் நொறுக்கப்பட்ட பூரிகளை சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
  • ‘பூரி பாயசம்’, குழந்தைகள் பொதுவாக இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Notes:
  • சப்பாத்தி அல்லது பூரி மீந்து விட்டால், அதை இப்படி செய்து சாப்பிடலாம்.

கோதுமை ராவா பாயசம்

Ingredients:
  • கோதுமை ரவா 1 கப்
  • வெல்லம் 2 கப்
  • பால் ஒரு கப்
  • ஏலக்காய் பொடி ½ sp
  • நெய் 2 - 3 ஸ்பூன்
  • முந்திரி 1 ௦ உடைத்துக்கொள்ளவும்
  • கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )

Method:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
  • அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
  • மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, கோதுமை ரவாவை நன்கு வறுக்கவும்.
  • கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
  • தண்ணீர் + பாதி பால் விடவும்.
  • நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
  • ரவா நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
  • தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
  • ரவை நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீதி பாலை சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அருமையான, கோதுமை ரவா பாயசம் தயார்.
  • சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Notes:
  • இங்கு இது ( கர்நாடகாவில் 'கொதி பாயசம்' என்று சொல்வார்கள்) பிரசித்தம். மிகவும் அருமையாக இருக்கும்.
  • வேண்டுமானால் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை சேர்க்கலாம்
  • கோதுமை ரவையை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெல்லம் சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ரவை நன்கு வேகும்.

நல்ல பாயசம் செய்வதற்கான சில டிப்ஸ்கள்

Ingredients:

    Method:

      Notes:
      • நீங்கள் பாயசம் தயாரிக்கும் போதெல்லாம், அவற்றை குறைந்த தீயில் சமைக்கவும். அது சுவையை அதிகரிக்கும், மேலும் அடிபிடிக்காதிருக்க உதவும்.
      • பாயசத்திற்கு முழு கிரீம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தவும்.
      • பாயசம் ‘வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ’ இருக்க வேண்டும் என்று விரும்பினால் , ஒரு ஸ்பூன் சர்க்கரையை வெறும் வாணலி இல் வறுத்து தண்ணீரில் கரைக்கவும். அதை பாயசத்தில் சேர்க்கவும். இது பயாசத்திற்கு நல்ல நிறத்தையும் நல்ல சுவையையும் தரும்.
      • பாயசத்தில் ‘condensed milk’ or ‘shortened milk’ சேர்ப்பது நல்லது.
      • பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினால், சர்க்கரையைவிட அதிக அளவு சேர்க்கவும்.
      • பாயசத்தை சுவையாக மாற்ற நீங்கள் அதில் முந்திரி பருப்புகள் அல்லது பாதாம் அல்லது ‘வெள்ளரிவிதைகள் ’அல்லது பூசணி விதைகள் சேர்க்கலாம்.
      • பாயசத்திற்கு சுவை அதிகரிக்க, ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூ அல்லது ‘ஜாதிகாய்' அல்லது ‘ஜாதி பத்ரி’ ‘பச்சை கற்பூரம்’ அல்லது ஏதாவது எசன்ஸ் சேர்க்கலாம்.

      தேங்காய் பால் பாயசம் (தேங்கா பால் பாயசம்)

      Ingredients:
      • 1 தேங்காய்
      • 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி
      • 1 கப் சர்க்கரை
      • 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
      • 1/4 sp கேசரி பவுடர்

      Method:
      • தேங்காயை துருவி, அரைத்து, அரிசியுடன் மிக்சியில் அரைக்கவும்.
      • குறைவான தண்ணீரில் அரைக்கவும்.
      • பாலை வடிகட்டி வைக்கவும்.
      • இது முதல் மற்றும் அடர்த்தியான பால்.
      • மீண்டும் தேங்காயை மிக்ஸில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி அதையே செய்யுங்கள்.
      • இது 2 வது பால்.
      • இப்போது ஒரு ஆழமான வாணலியில் இரண்டாவது பாலை ஊற்றி ஒரு கொதிக்க
      • விடுங்கள்.
      • சர்க்கரை கலவையை நன்றாக சேர்க்கவும்.
      • ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் சேர்க்கவும்.
      • மீண்டும் அது ஒரு கொதி கொதிகட்டும்.
      • இப்பொழுது முதல் பால் சேர்க்கவும், அது ஜஸ்ட் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
      • நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கலாம்.
      • இது மிகவும் சுவையான மற்றும் எளிமையான பயாசம். நாங்கள் இதை 'தேங்கா பால் பாயசம்' என்று சொல்வோம் . நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
      • பொதுவாக இதை 'ஆடி' மாதத்தின் 1 ஆம் தேதி செய்வோம். இந்த பாயசத்தை புது மாப்பிள்ளைக்கு ஒரு வெள்ளி டம்ளரில் தருவோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

      Notes:
      • தேங்காயை அரைக்கும்பொழுது, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்தால் முழு பாலும் எடுக்கவரும் என்று சொல்வார்கள். நான் சில சமயங்களில் அப்படி செய்து இருக்கேன்.
      • கேசரி பவுடரும் பதிலாக, குங்குமப்பூ கூட போடலாம்.

      அவல் பாயசம்

      Ingredients:
      • மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
      • சக்கரை 3/4 கப்
      • ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
      • முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
      • நெய் 1 டேபிள் ஸ்பூன்
      • பால் 1 கப்

      Method:
      • ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
      • அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
      • அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
      • வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
      • அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
      • ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
      • அவல் பாயசம் தயார்.

      Notes:
      • கெட்டி அவல் உபயோகிப்பதானால் அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.அப்புறம் பிழிந்து வடியப்போடனும். அப்பவும் வறுக்க முடியாது எனவே மெல்லிசு அவல் தான் பாயசம் மற்றும் கேசரிக்கு சிறந்தது. கெட்டி அவல் கொண்டு, அவல் சக்கரை செய்யலாம், வெல்ல அவல் செயலாம் . மிஷின் அவல் வெள்ளையாக குப்பை இல்லாமல் இருக்கும். கெட்டி அவலில் தவிடு இருக்கும்.

      சேமியா பாயசம் -2

      Ingredients:
      • சேமியா - 250 கிராம்
      • முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
      • பால் - 1/2 லிட்டர்
      • சர்க்கரை - 1 கப்
      • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
      • ஏலப்பொடி சிறிதளவு.

      Method:
      • வாணலியில் நெய் விட்டு, சேமியாவை போட்டு, மிதமான சூட்டில் வறுத்து, சேமியா நிறம் மாறத் துவங்கியதும், அதில் முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதில் பாதி பாலை + கொஞ்சம் தண்ணீர் விட்டு, சேமியாவை நன்கு வேக வைக்கவும்.
      • அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து செய்யவும்.
      • சேமியா வெந்ததும், சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறவும்.
      • சிறிது நேரத்தில், சர்க்கரை கரைந்து, பொன்னிறமாக மாறத் துவங்கும்.
      • கலவை கெட்டியானதும் இன்னும் கொஞ்சம் பால் விட்டு, ஏலப்பொடி போட்டு இறக்கிவிடவும்.
      • சுவையான 'சேமியா பாயசம்' தயார்.

      Notes:
      • உங்களுக்கு தேவையானால், 'மில்க்மெய்ட்' சேர்க்கலாம்.
      • ஏலப்பொடிக்கு பதிலாக, ஏதாவது எசன்ஸ் அல்லது குங்குமப்பூ அல்லது ஜாதிக்காய் என உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கலாம்.

      அக்கார அடிசில்

      Ingredients:
      • பச்சரிசி - அரை கப்
      • பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
      • நெய் 1/2 கப்
      • முந்திரிப் பருப்பு - 10 - 12
      • திராக்ஷை 10 -12
      • ஏலக்காய் - 5
      • பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
      • பால் - 2 கப் - 2 1/2 கப்
      • பொடித்த வெல்லம் - 2 கப்

      Method:
      • அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
      • பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
      • பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
      • அப்பப்போ கிளறனும்.
      • அது பாட்டுக்கு வேகட்டும்.
      • இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
      • அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
      • சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
      • அருமையான இனிப்பு இது.

      Notes:
      • இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்
      • மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்.
      • அக்கார அடிசில் ...............இது எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் கோவில்களில் ரொம்பவும் பிரபலமாக பாயசம். ஐயங்கார் புளிக்காச்சல் - புளியோதரை போல த்தான் அக்கார அடிசிலும் குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் நிறைய நெய்யும் பாலும் கலந்து இதை செய்வோம்
      • பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும் செய்து பாருங்களேன் !

      தக்காளி பச்சடி

      Ingredients:
      • 2 தக்காளி - கெட்டியானதாகவும், பெங்களுர் தக்காளியாகவும் இருக்க வேண்டும்.
      • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
      • பச்சை மிளகாய் - 4 -6
      • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
      • கடுகு - 1/2 ஸ்பூன்
      • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
      • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • எண்ணெய் - 1 ஸ்பூன்
      • உப்பு - தேவையான அளவு
      • கறிவேப்பிலை ஒரு ஆர்க்

      Method:
      • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு சேர்த்து அரைக்கவும்.
      • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
      • கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
      • பொடியாக நறுக்கின தக்காளியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
      • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
      • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.

      Thursday, October 8, 2020

      ஜவ்வரிசி பச்சடி

      Ingredients:
      • 1 கப் ஜவ்வரிசி
      • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
      • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
      • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
      • உப்பு
      • தாளிக்க :
      • அரை ஸ்பூன் கடுகு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • இரண்டு ஸ்பூன் எண்ணெய்

      Method:
      • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
      • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
      • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
      • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.
      • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
      • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

      ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி

      Ingredients:
      • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
      • 1 கப் ஜவ்வரிசி
      • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
      • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
      • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
      • உப்பு
      • தாளிக்க :
      • அரை ஸ்பூன் கடுகு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • இரண்டு ஸ்பூன் எண்ணெய்

      Method:
      • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
      • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
      • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
      • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
      • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
      • பரிமாறுவதற்கு முன், நன்றாக ஊறி உள்ள ஜவ்வரிசி பச்சடி மேல் கொட்டவும்.
      • நன்கு கலக்கி பரிமாறவும்.
      • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி ரெடி.
      • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

      Notes:
      • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். அதனால் ஆறினதும் சேர்க்கவும் . அப்படி உடனே போடும் பட்ஷத்தில் கூட உள்ள ஜவ்வரிசி அந்த நீரை உறிஞ்சிவிடும். பச்சடி கெட்டியாக இருக்கும்.

      வெங்காயப் பச்சடி

      Ingredients:
      • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
      • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
      • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
      • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
      • உப்பு
      • தாளிக்க :
      • அரை ஸ்பூன் கடுகு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • அரை ஸ்பூன் எண்ணெய்

      Method:
      • தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
      • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
      • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
      • இதன் மேல் கொட்டவும்.
      • அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
      • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

      Notes:
      • சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
      • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.

      பூந்தி ராய்த்தா பச்சடி

      Ingredients:
      • புளிக்காத கெட்டித்தயிர் – 1கப்
      • காரா பூந்தி –2கப்
      • உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
      • நெய் இல் வறுத்த முந்திரிபருப்பு – 5 - 6 (உடைத்து வைத்துக் கொள்ளவும் )
      • பச்சைமிளகாய் – 2
      • சர்க்கரை – 1 டீஸ்பூன்
      • மல்லித்தழை – சிறிதளவு
      • உப்பு – தேவைக்கேற்ப

      Method:
      • பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
      • அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
      • பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

      காரட் பச்சடி

      Ingredients:
      • 2 காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
      • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
      • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
      • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
      • உப்பு
      • தாளிக்க :
      • அரை ஸ்பூன் கடுகு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • அரை ஸ்பூன் எண்ணெய்

      Method:
      • ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
      • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
      • அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
      • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

      Notes:
      • சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

      நார்த்தங்காய் பச்சடி

      Ingredients:
      • நாரத்தை 1 (பொடியாக நறுக்கியது)
      • உப்பு – தேவைக்கேற்ப
      • புளி – நெல்லிக்காய் அளவு
      • மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
      • துருவிய வெல்லம் – 1/4கப்
      • கடுகு – 1/4டீஸ்பூன்
      • நறுக்கிய பச்சைமிளகாய் – 3
      • வெந்தய பொடி 1 /4 டீ ஸ்பூன்
      • மிளகாய் பொடி 1 /4 டீ ஸ்பூன்
      • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

      Method:
      • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, புளிக்கரைசலில் சேர்க்கவும்.
      • அத்துடன், பொடியாக நறுக்கிய நாரத்தங்காய்,மஞ்சள் பொடி சேர்க்கவும்.
      • நார்த்தங்காய் நன்கு வெந்ததும், உப்பு வெல்லம் சேர்க்கவும்.
      • எல்லாமாக சேர்ந்துகொண்டு வரும்போது, கொஞ்சம் வெந்தய பொடி மற்றும் மிளகாய் பொடி போடவும்.
      • இன்னும் கொதித்து இறுகினதும், இறக்கவும்.

      Notes:
      • புளி கரைசலுக்கு பதிலாக ஒரு வேளை நீங்கள் புளி பேஸ்ட் உபயோகித்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நாரத்தங்காய் வேகும்.

      மாங்காய் இஞ்சி பச்சடி!

      Ingredients:
      • புளிப்பில்லாத தயிர் – 2கப்
      • நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
      • தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்
      • சீரகம் 1 /2 டீஸ்பூன்
      • கடுகு – 1/4டீஸ்பூன்
      • கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு
      • பெருங்காயம்
      • எண்ணெய்
      • உப்பு – தேவைக்கேற்ப

      Method:
      • தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும்.
      • தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

      மல்டி வெஜிடபிள் பச்சடி

      Ingredients:
      • துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
      • தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
      • வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
      • கடுகு – 1/4டீஸ்பூன்
      • பச்சைமிளகாய் – 1
      • மல்லித்தழை - சிறிதளவு
      • தயிர் – 3கப்
      • உப்பு – ருசிக்கேற்ப
      • எண்ணெய் – தேவையானாளவு.

      Method:
      • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
      • குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
      • தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
      • பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
      • உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.

      மணத்தக்காளி வற்றல் பச்சடி

      Ingredients:
      • மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
      • கெட்டித்தயிர். – 2கப்
      • மிளகாய்வற்றல் – 1
      • துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
      • சீரகம் – 1/4டீஸ்பூன்
      • நெய் – 2டீஸ்பூன்
      • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
      • உப்பு – தேவைக்கேற்ப

      Method:
      • வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
      • பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
      • பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.

      நெல்லிமுள்ளி பச்சடி

      Ingredients:
      • நெல்லிமுள்ளி – 10 - 15
      • புளிப்பில்லாத தயிர் – 2கப்
      • பச்சைமிளகாய் – 4
      • தேங்காய்த்துருவல். - 3டேபிள்ஸ்பூன்
      • நெய் – 1டீஸ்பூன்
      • கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
      • உப்பு - தேவைக்கேற்ப

      Method:
      • நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
      • அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
      • அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
      • பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
      • தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.
      • குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.

      விளாம்பழ பச்சடி

      Ingredients:
      • விளாம்பழம்- - 2
      • பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
      • சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
      • கடுகு – 1/4டீஸ்பூன்
      • பச்சை மிளகாய் – 2
      • நெய் – 2டீஸ்பூன்
      • உப்பு – ஒருசிட்டிகை

      Method:
      • விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
      • வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
      • வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
      • மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
      • உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
      • அடுப்பிலிருந்து இறக்கவும்.
      • ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
      • அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !

      வெள்ளரிக்காய் பச்சடி 2

      Ingredients:
      • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
      • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
      • பச்சை மிளகாய் - 4 -6
      • தேங்காய் துருவல் - 1 கப்
      • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
      • கடுகு - 1/2 ஸ்பூன்
      • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
      • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • எண்ணெய் - 1 ஸ்பூன்
      • உப்பு - தேவையான அளவு

      Method:
      • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
      • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
      • கொஞ்சமும்
      • தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
      • துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
      • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
      • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.

      வெள்ளரிக்காய் பச்சடி 3

      Ingredients:
      • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
      • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
      • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
      • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
      • உப்பு
      • தாளிக்க :
      • அரை ஸ்பூன் கடுகு
      • ஒரு சிட்டிகை பெருங்காயம்
      • அரை ஸ்பூன் எண்ணெய்

      Method:
      • ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
      • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
      • அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
      • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

      Notes:
      • சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

      தேங்காய் இஞ்சி பச்சடி

      Ingredients:
      • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
      • பச்சை மிளகாய் - 4 -6
      • தேங்காய் துருவல் - 1 கப்
      • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
      • கடுகு - 1/2 ஸ்பூன்
      • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
      • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
      • எண்ணெய் - 1 ஸ்பூன்
      • உப்பு - தேவையான அளவு

      Method:
      • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
      • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
      • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
      • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
      • முக்கியமாய் 'ஸ்ரார்த துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.

      நெல்லிக்காய் பச்சடி

      Ingredients:
      • பெரிய நெல்லிக்காய் - 5
      • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
      • பச்சை மிளகாய் - 2 - 4
      • தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
      • இஞ்சி 1 இன்ச் அளவு
      • கடுகு - 1/2 ஸ்பூன்
      • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
      • கறிவேப்பிலை - சிறிதளவு
      • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
      • எண்ணெய் - 1 ஸ்பூன்
      • உப்பு - தேவையான அளவு

      Method:
      • நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
      • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
      • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
      • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

      மாங்காய் பச்சடி

      Ingredients:
      • 1 ஸ்பூன் வேப்பம் பூ
      • 4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
      • 3 ஸ்பூன் வெல்லம்
      • 1/2 ஸ்பூன் கடுகு
      • 2 பச்சை மிளகாய்
      • 1/2 ஸ்பூன் உப்பு
      • 1 ஸ்பூன் நெய்

      Method:
      • முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
      • பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
      • பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
      • உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
      • அருமையான பச்சடி ரெடி.

      Notes:
      • புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
      • என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்
      • நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும்.
      • பிறகு மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.
      • அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".

      டாங்கர்

      Ingredients:
      • சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
      • திக்கான மோர் - ஒரு கப்
      • மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
      • உப்பு - தேவையான அளவு.

      Method:
      • மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
      • வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
      • அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
      • எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
      • நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
      • ரொம்ப அருமையாக இருக்கும் .

      Notes:
      • இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

      சோள அடை

      Ingredients:
      • பச்சை சோளம் - ஒரு டம்ளர்
      • அரிசி - ஒரு டம்ளர்
      • கடலைப்பருப்பு - அரை டம்ளர்
      • துவரம்பருப்பு - கால் டம்ளர்
      • உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
      • பெருங்காயம் - சிறு துண்டு
      • மிளகாய் வற்றல் - 5
      • பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
      • கறிவேப்பிலை, உப்பு - சிறிது
      • நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

      Method:
      • வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
      • அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
      • பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
      • அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
      • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
      • இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
      • சுவையான சோள அடை ரெடி.
      • தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.

      Notes:
      • இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
      • வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
      • பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்.

      குதிரைவாலி தக்காளி தோசை மற்றும் மசால் தோசை

      Ingredients:
      • 4 கப் குதிரைவாலி அரிசி
      • 1 கப் உளுந்து
      • 1 டீஸ்பூன் வெந்தயம்

      Method:
      • எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
      • பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
      • 4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.
      • தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
      • சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

      Notes:
      • குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும் .

      கம்பு தேன்குழல்

      Ingredients:
      • கம்புமாவு 2 கப்
      • பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
      • எள்ளு கொஞ்சம்
      • பெருங்காய பொடி
      • தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
      • உப்பு
      • நெய் 1 ஸ்பூன்
      • பொறிக்க எண்ணெய்

      Method:
      • இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி ) போட்டு நன்கு கலக்கவும்.
      • கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
      • தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய் இல் பிழியவும்.
      • இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
      • நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
      • என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.

      கேழ்வரகு உளுந்து தோசை( ராகி, உளுந்து)

      Ingredients:
      • கேழ்வரகு மாவு 1 டம்ளர்
      • உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
      • உப்பு

      Method:
      • கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக‌ அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
      • காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
      • மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
      • இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
      • ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
      • அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான‌ மொறுமொறுப்பான‌ ராகி தோசை ரெடி.
      • அருமையாக இருக்கும்.
      • என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
      • எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
      • அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை!

      சுக்கா ரொட்டி

      Ingredients:
      • 1 கப் கோதுமை மாவு
      • 2 கரண்டி நல்லெண்ணெய்

      Method:
      • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
      • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
      • நன்றாக கலக்கவும்.
      • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
      • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
      • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
      • சப்பாத்தியாக இடவும்.
      • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
      • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
      • சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
      • இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
      • அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
      • கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
      • அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
      • சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
      • இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
      • எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

      மிகவும் மிருதுவான சப்பாத்தி

      Ingredients:
      • 1 கப் கோதுமை மாவு
      • 1 கரண்டி நல்லெண்ணெய்
      • 2 கரண்டி நெய்
      • உப்பு

      Method:
      • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
      • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
      • நன்றாக கலக்கவும்.
      • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
      • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
      • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
      • சப்பாத்தியாக இடவும்.
      • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
      • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
      • இருபுறமும் திருப்பிப்போடவும்.
      • அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
      • அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
      • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

      சாதாரண சப்பாத்தி

      Ingredients:
      • 1 கப் கோதுமை மாவு
      • 2 கரண்டி எண்ணெய் அல்லது நெய்
      • உப்பு

      Method:
      • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
      • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
      • நன்றாக கலக்கவும்.
      • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
      • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
      • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
      • சப்பாத்தியாக இடவும்.
      • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
      • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
      • இருபுறமும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சப்பாத்திகள் செய்யுங்கள்.
      • மிருதுவான சப்பாத்திகள் தயார்.
      • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

      வெள்ளரிக்காய் பச்சடி

      Ingredients:
      • 4 வெள்ளரிக்காய்
      • உப்பு
      • 1 கப் துருவிய தேங்காய்
      • 2 பச்சை மிளகாய்
      • 1 கப் தயிர்
      • பொடியாக நறுக்கிய மல்லி இலை

      Method:
      • நன்கு விளைந்த பெரிய வெள்ளரிக்காயை தோல் சீவி, துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, மிக்சியில் அரைத்து, உப்பில் ஊறிய வெள்ளரிக்காயை நன்கு பிழிந்து தனியே எடுத்து, தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர், ஒரு கப் எடுத்து, கடைந்து, இத்துடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லி இலைகளை சேர்த்துக் கலந்தால், வெள்ளரிக்காய் பச்சடி தயார்

      பீட்ரூட் பச்சடி 2

      Ingredients:
      • 2 பீட்ரூட்
      • 1 கப் துருவிய தேங்காய்
      • தயிர்
      • நறுக்கிய மல்லி இலை
      • உப்பு

      Method:
      • இரண்டு பெரிய அளவு பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, வேக வைத்து துருவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய் பச்சடியில் கலந்தது போலவே, தேங்காய் கலவை, தயிர், கொஞ்சம் உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்தால், பீட்ரூட் பச்சடி தயார்.

      அரிசி - சீஸ் உருண்டை

      Ingredients:
      • வேகவைத்த அரிசி சாதம் - 1 கப்
      • நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
      • துருவிய சீஸ் - 1/4 கப்
      • துருவிய கேரட் - 1 டேபிள் ஸபூன்
      • நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
      • நறுக்கிய மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
      • இடித்த மிளகாய் வற்றல் துாள் - 1 டீ ஸ்பூன்
      • மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
      • உப்பு - ருசிக்கு
      • மைதா - 1/2 கப்
      • எண்ணெய் - தேவைக்கு

      Method:
      • மைதா மாவு தவிர, தேவையான பொருட்கள் அனைத்தையும், நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின், மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும். சமைத்த சாதத்தில், நீர்ச் சத்து இருக்கும் என்பதால், தனியாக, தண்ணீர் சேர்க்க வேண்டாம். அனைத்தும் நன்கு கலந்த பின், சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே வைக்கவும்.
      • வாணலியில், தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும், உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் தொட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

      உருளைக் கிழங்கு பக்கோடா

      Ingredients:
      • வேகவைத்த உருளைக் கிழங்கு - 3
      • கடலை மாவு - 1 கப்
      • அரிசி மாவு - 1/2 கப்
      • பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
      • மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
      • நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்
      • நறுக்கிய வெங்காயம் - 1 கப்
      • சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
      • எண்ணெய் - தேவைக்கு
      • நறுக்கிய மல்லி தழை - சிறிது

      Method:
      • அகலமான பாதிரத்தில், வேக வைத்து, தோல் உரித்த, உருளைக் கிழங்கை, பிசைந்து கொள்ளவும். இதில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, உப்பு, மிளகாய் துாள், சீரகம், பச்சை மிளகாய், மல்லித் தழை, வெங்காயம் சேர்த்து, கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
      • வாணலியில், எண்ணெய் ஊற்றி, சூடானதும், மிதமான தீயில், சிவக்க பொரித்து, எடுக்கவும். சூவையான உருளைக் கிழங்கு பங்கோட ரெடி.

      மோதிசூர் லட்டு

      Ingredients:
      • கடலை மாவு - 1 கப்
      • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
      • சர்க்கரை - 1 கப்
      • ஏலக்காய் - 1/2 டீ ஸ்பூன்
      • பாதாம் - 10
      • முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
      • உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்

      Method:
      • ஒரு கப் கடலை மாவிற்கு, ஒரு கப் தண்ணிர் சேர்த்து, கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியை சூடாக்கி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, புகை வரும் அளவிற்கு சூடானதும், மெல்லிய துளைகள் உள்ள சல்லடைக் கரண்டியை எண்ணெய் மேல் பிடித்து, கடலை மாவை ஊற்றவும். மாவு எண்ணெயில் விழுந்த இரண்டு நிமிடங்களில், எடுத்து விட வேண்டும். அதிக நேரம் வைக்க வேண்டாம். இப்படியே, மொத்த மாவையும், பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
      • பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரைக்கு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை, காய்ச்சவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இதில், பூந்தியைப் போட்டு, சர்க்கரை பாகும், பூந்தியும் கெட்டியாகும் வரை பக்குவமாக கிளறவும். இதில், நெய், ஏலக்காய் பொடி போட்டு, அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
      • ஆறியதும், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, நீரில் ஊற வைத்து உரித்த பாதாம் சேர்த்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

      கீரை சூப்

      Ingredients:
      • கீரை - 1 கட்டு
      • வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
      • நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
      • மைதா - 1 டேபிள் ஸ்பூன்
      • பால் - 1 ½ கப்
      • உப்பு - ருசிக்கு
      • மிளகு - தேவைக்கு
      • பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்

      Method:
      • கீரையை சுத்தம் செய்து, நறுக்கி, கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு, நீரை வடிகட்டி, அதில் குளிர்ந்த நீரை ஊற்றி, நன்கு அலசி, நீரை வடித்து விடவும்.
      • மிக்சியில் கீரையை போட்டு, சிறிது நீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
      • வாணலியில், வெண்ணெய் போட்டு, உருகியதும், பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும், மைதாவை சேர்க்கவும். நன்கு வதக்கி, இதில், அரைத்து வைத்துள்ள கீரை கலவையை சேர்க்கவும். லேசாக கொதி வந்ததும், உப்பு, மிளகு துாள் சேர்த்து, நன்கு கலக்கவும். சில நிமிடங்களில், பால் சேர்த்து வேக விடவும். கீரையின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வேக விடவும்.
      • ஓரளவு கலவை கெட்டியானதும், கிண்ணத்தில் ஊற்றி, மேலே பிரஷ் கிரீம் போட்டு பரிமாறவும்.

      புரோகோலி சூப்

      Ingredients:
      • புரோகோலி - 1
      • உருளை கிழங்கு - 1
      • வெங்காயம் - 1
      • பூண்டு - 4 பல்
      • பால் - 1 கப்
      • வெங்காய தழை - சிறிது
      • மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்
      • உப்பு - ருசிக்கு

      Method:
      • புரோகோலியை துண்டுகளாக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோல் சீவி, நறுக்கவும். இத்துடன், நறுக்கிய வெங்காயம், பால், மிளகு துாள், உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காய தாளை சேர்த்து, மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, குக்கரில், நான்கு விசில் வேக விடவும். அழுத்தம் வெளியேறியதும், கலவையை நன்கு ஆற விடவும். இதை, மிக்சியில் ஊற்றி, கூழாக அரைத்துக் கொள்ளவும்.
      • இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, சில நிமிடங்கள் காய்ச்சவும். இதில், அரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், உப்பு, மிளகு துாவி பரிமாறவும்.

      கேரட் சூப்

      Ingredients:
      • கேரட் - 4
      • உருளைக் கிழங்கு - 4 சிறிய துண்டுகள்
      • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
      • பூண்டு - 2 பல்
      • இஞ்சி - 1 துண்டு
      • நறுக்கிய வெங்காயம் - 1 கை பிடி
      • தண்ணீர் - 2 கப்
      • உப்பு - ருசிக்கு
      • பொடித்த மிளகு - ½ டீ ஸ்பூன்
      • புதினா இலை - சிறிது
      • பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்

      Method:
      • குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கு, கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கி, மிளகு, உப்பு சேர்த்து, புதினா இலைகளையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, நான்கு விசில் வைக்கவும். அழுத்தம் வெளியேறியதும், குக்கரை திறந்து, புதினா இலைகளை தனியே எடுத்து விடவும்.
      • கலவை நன்கு ஆறியதும், மிக்சியில் அரைக்கவும். வாணலியில் கலவையை ஊற்றி, மிதமான சூட்டில், சூப் கெட்டியாகும் வரை கலக்கவும். சூப் கிண்ணத்தில் மாற்றி, மேலே பிரஷ் கிரீம் போடடு, விரும்பினால், உப்பு, மிளகு சேர்த்து குடிக்கவும்.

      கோதுமை ரவை கேசரி

      Ingredients:
      • கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
      • சர்க்கரை - 3/4 கப்
      • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
      • ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
      • முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
      • 'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
      • பால் 1 /2 கப்

      Method:
      • வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
      • தனியே எடுத்து வைக்கவும்.
      • மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
      • கருகாமல் வறுக்க வேண்டும்.
      • அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
      • நடு நடுவில் கிளறி விடவும்.
      • வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
      • அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
      • அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
      • அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.

      Notes:
      • இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.

      கச்சோடி (Rajasthani)

      Ingredients:
      • 2 tbsp - தனியா
      • 1 tbsp - சோம்பு
      • 1/2 tbsp - சீரகம் ...இந்த மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
      • ¼ tsp – பெருங்காய பொடி
      • 1/2 tbsp - காய்ந்த வெந்தயக் கீரை அல்லது பிரெஷ் கீரை - பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
      • 2 tbsp - மிளகாய் பொடி
      • 1 tsp - கருப்பு உப்பு ( இது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...சாதாரண உப்பு போடலாம் )
      • 1/2 tsp - கரம் மசாலா
      • 1 tbsp - ஆம்சுர் எனப்படும் மாங்காய் பொடி அல்லது / 1/8 tsp - சிட்ரிக் ஆசிட் / 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
      • 1/2 tsp - மிளகுப் பொடி
      • 1/3 cup - கடலை மாவு
      • 1/2 cup - பயத்தம் பருப்பு - ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைத்து, ஜஸ்ட் ஒரே ஒரு சுற்று மிக்சி இல் சுற்றி எடுக்கவும். பருப்பு மிகவும் பொடியாகக்கூடாது, மாவாகவும் ஆகக் கூடாது...ஒன்றிரண்டாக உடைந்தால் போதுமானது
      • 1 tbsp பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி நசுக்கி வைத்துக் கொள்ளவும்
      • 2 tbsp – எண்ணெய்
      • மேல் மாவுக்காக :
      • 2 1 / 2 cup - மைதா
      • 1 tsp - உப்பு
      • 1 /2 – உருகிய நெய்
      • கொஞ்சம் தண்ணீர்

      Method:
      • முதலில் பருப்பை அலசி ஊற வைக்கவும்.
      • இது ஒரு ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
      • பருப்பை ஊறவைக்கும்போதே மேல்மாவை தயாரித்து வைத்துவிடலாம்....
      • இதுவும் 30 நிமிடங்கள் ஊறவேண்டும்.
      • ஒரு பேசினில் மைதாவை போட்டு, அதில் உப்பு போட்டு, நெய்யை விட்டு நன்கு கலக்கவும்.
      • பொறுமையாக கலக்கவும்.
      • நன்கு கலந்ததும் மாவை கையால் பிடித்தால், அதாவது ஒரு பிடி மாவை எடுத்து கையால் அழுத்திப் பிடித்தால் அது பிடிக்க வரவேண்டும்.
      • பிடி கொழுக்கட்டை போல பிடிக்க வரவேணும், மீண்டும் உதிர்த்தால் உதிரவேண்டும்...இது தான் மாவு பதம்.
      • சரியாக ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் நெய்யும் மாவும் இருந்தால் இப்படி வரும்.
      • ( சமோசாவுக்கும் இதே பதம் தான்
      • இப்போ கொஞ்சம் கொஞ்சமாக லேசாக சூடான தண்ணீர் விட்டு மாவை பிசைய ஆரம்பிக்க வேண்டும்.
      • நன்கு அழுத்திப் பிசையவேண்டும்.
      • மாவு நல்லா 'மெத் மெத்' என்று பஞ்சு போல ஆகும்வரைக்கும் பிசையவேண்டும்.
      • சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படி பிசையவேண்டும்.
      • முடிக்கும்போது மாவு கைகளில் ஓட்ட கூடாது.
      • இந்த மாவை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
      • அது ஊறட்டும் அதற்குள் நாம் உள்ளே வைக்க வேண்டியதை தயார் செய்வோம்.
      • ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு, ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள தனியா முதலியவைகளை போடவும்.
      • கொஞ்சம் வறுபட்டதும், நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை போட்டு வதக்கவும்.
      • அடுப்பை நிதானமாக எரியவிடவும்... அப்போதுதான் எல்லாம் கருகாமல் வறுபடும்.
      • அடுத்ததாக, மிளகுப் பொடி, மிளகாய் பொடி, ஆம்சூர், கரம்மசாலா, வெந்தயக் கீரை மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
      • ஒரு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்குங்கள்.
      • அப்புறம் கடலைமாவை தூவி, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
      • எல்லாமாக சேர்ந்து கொண்டு நல்ல மணம் வரும்.
      • இப்போது ஒன்றாண்டாக அரைத்து வைத்துள்ள பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
      • இதை ஒரு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
      • பிறகு அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
      • நன்கு ஆறினதும், அந்த மசாலாவை நன்கு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தி பிடித்தது வைத்துக்கொள்ளவும்.
      • மேலே சொன்ன அளவிற்கு கிட்ட தட்ட 15 உருண்டைகள் வரும்.
      • இப்போது மேல்மாவை எடுத்து நன்கு ஒருமுறை அழுத்தி பிசையவும்.
      • அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து உருட்டி, இந்த மசாலா உருண்டையை வைத்து கொழுக்கட்டை மாவிற்குள் பூரணத்தை எப்படி உள்ளே வைப்போமோ அது போல வைத்து உருண்டையாக ஆக்கவும்.
      • இது போல் எல்லா வற்றையும் செய்யவும்.
      • பிறகு ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையால் அழுத்தி, தட்டை போல செய்யவும்.
      • இது போல ஒரு 4 செய்து கொள்ளவும்.
      • அடுப்பில் எண்ணெய் வைத்து அது சுடும் முன்னரே இந்த கச்சோடிகளை போடவும்.
      • அடுப்பை மிகவும் நிதானமாக எரியவிடவும்.
      • ஒரே சமயத்தில் ஒரு நான்கு கச்சோடிகள் பொறிக்கலாம்.
      • இது ஒரு பக்கத்தில் வேகவே 4 - 5 நிமிடங்கள் எடுக்கும்.
      • பிறகே அதை திருப்பி போடவேண்டும்.
      • அதுவும் 4 நிமிடங்கள் எடுக்கும்.
      • இப்போது பொன்னான நிறத்தில் கச்சோடிகள் தயார்.
      • கச்சோடிகள் பொறியும் வரை மற்ற உருண்டைகளை மூடி வைக்கவும்.
      • பொறித்தானதும் அடுப்பை அணைத்து விடவும், எண்ணெய் நன்கு ஆறினதும் மீண்டும் அடுப்பை மூட்டி, எண்ணெய் சுட ஆரம்பிப்பதற்குள் அடுத்த நான்கு கச்சோடிகளை போட்டு பொறிக்கவும்.
      • இது மிக முக்கியம், இப்படி செய்தால் தான் கச்சோடிகள் நன்கு பொறியும்.
      • இதை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
      • இதற்கு , பச்சைமிளகாய் புதினா சட்னி, மற்றும் பேரீச்சம்பழம் இனிப்பு சட்னி அருமையாக இருக்கும்.
      • அது இல்லாவிட்டாலும் , வெறும் தயிரில் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு வைத்துக் கொண்டாலும் போதும், அருமையாக இருக்கும்.

      Notes:
      • இதைப் அடிக்கத்தான் நேரம் அதிகம் ஆனது, செய்வதற்கு அதைவிட குறைவான நேரமே போதும்..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

      Images:

      Paneer Bakoda 3

      Ingredients:
      • Paneer 200 gms (cut into small pieces )
      • Besan 100 gms
      • Rice flour 100 gms
      • Redcolour
      • Coriander powder 1 table spoon
      • Garam masala ( optional) 1 spoon
      • Red chilly powder 1 tea spoon
      • Black pepper powder ( opetional) ½ spoon
      • Salt
      • Asafoetida a pinch
      • Ajwan 1 tea spoon
      • Oil to fry

      Method:
      • Put paneer pieces in a bowl and add Coriander powder,Garam masala,Red chilly powder,Black pepper powder and Salt.
      • Mix them softly without breaking paneer pieces.
      • Keep aside.
      • In another vessel put besan, rice flour, salt, ajwan, Asafoetida and a pinch of red colour.
      • Mix well by adding water.
      • Let it be somewhat thick batter.
      • Now put this batter with paneer pieces and mix well but gently.
      • Let the thick dough coat paneer pieces evenly.
      • Heat a kadai with oil and put the dough coated paneer pieces into it.
      • Allow them till they become golden brown.
      • Flip them gently and fry them till the oil reduces its sound.
      • Remove it from the oil and serve hot with tomato sauce.

      மீந்த சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ்

      Ingredients:
      • மீந்த சப்பாத்தி - 5
      • பெரிய வெங்காயம் - 2
      • பச்சை மிளகாய் - 2
      • காரட் 2
      • எண்ணெய் - 3 + 3 தேக்கரண்டி
      • பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
      • கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
      • உப்பு - தேவையான அளவு.
      • கரம் மசாலா - 1 /2 டீ ஸ்பூன்

      Method:
      • வெங்காயம், பச்சைமிளகாய், காரட் , பீன்ஸ் , குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
      • சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
      • வாணலி இல் எண்ணெய் விட்டு , நறுக்கி வைத்துள்ள , நூடுல்ஸ் போல நறுக்கின சப்பாத்திகளை பொறித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
      • மீண்டும் அதே வாணலியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
      • தேவையானால் இன்னும் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.
      • உப்பு மிளகாய்ப்பொடி போடவும்.
      • இந்த கலவையில், நறுக்கி, வறுத்த சப்பாத்தியை போடவும்.
      • தீயை மிதமாக்கி மேலாக கிளறவும்.
      • கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
      • சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார்.

      பேல்' பழைய பிரட் லிருந்து

      Ingredients:
      • 4-5 ஸ்லைஸ் பழைய , மீந்த பிரட்
      • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
      • 1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
      • 1/2கப் பொடியாக நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு
      • 1 /4 கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
      • 1/2 கப் ஓமப்பொடி
      • புளி சட்னி கொஞ்சம்
      • புதினா + கொத்துமல்லி சட்னி கொஞ்சம்
      • 2 ஸ்பூன் நெய்
      • உப்பு

      Method:
      • ப்ரெட் ஐ துண்டங்களாக நறுக்கவும்.
      • வறட்டு வாணலி இல் கருகாமல் நல்லா 'கர கர' பாக வறுக்கவும் .
      • இப்போ , நெய் விட்டு வறுக்கவும்.
      • எல்லாம் 'ஒத்தார்' போல வறுபட்டதும் , ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
      • இப்போது எவ்வளவு பேர் சாப்பிடணுமோ அவ்வளவு கப் கள் எடுத்துக்கொள்ளவும்.
      • அதில் மேலே சொன்ன ellavattraiyum கொஞ்சம் கொஞ்சம் போடவும்.
      • சட்னிகளை விடவும்.............உப்பு கொத்துமல்லி துவி உடனே சாப்பிடக் கொடுக்கவும் .
      • ரொம்ப சுவையான ' பேல்' பழைய பிரட் லிருந்து ரெடி.

      Notes:
      • சட்னி வேண்டாதவர்கள்....டொமாடோ சாஸ், சோயா சாஸ் போட்டு சாப்பிடலாம்.

      கார அப்பம்

      Ingredients:
      • மீந்த இட்லி மாவு – ஒரு கப்
      • நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
      • கொத்தமல்லி - கொஞ்சம்
      • பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
      • எண்ணெய் – பொரிக்க
      • உப்பு – தேவையான அளவு.

      Method:
      • இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
      • அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
      • வெந்ததும் திருப்பி விடவும்.
      • நன்கு வெந்ததும் எடுக்கவும்.
      • கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
      • இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
      • எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா.
      • எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்.

      Blog Archive