- அரிசி 4 கப்
- உளுத்தம் பருப்பு 1 கப்
- மெல்லிசு அவல் 2 - 2 1/2 கப்
- ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்) உப்பு
- ஸ்பூன் சோடாஉப்பு ¼ Tea Spoon
Method:
- அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும், சோடாஉப்பு சேர்த்து.
- பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
- அரைப்பதற்கு முன்பு, அவலை நன்கு அழுக்கு போக களைந்து, பிழிந்து வைத்துக்கணும்.
- முதலில் உளுந்து, பிறகு அரிசி தனியாக அரைக்கணும்.
- அரிசி அரைத்ததும், ஊறிய அவலை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கணும்.
- பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்த்து, கரைத்து வைக்கணும் எப்பவும்போல.
- மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
- பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
- பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் .
- சூடான இட்லியை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம். நன்கு
- ஆறியவுடன் கூட ‘மெத்’ என்று தான் இருக்கும் இந்த இட்லி.மெத் மெத் இட்லி!
No comments:
Post a Comment